சச்சினுக்கே 200 போட்டிகள் ஆச்சு. ஆனா டிம் சவுதி 66 போட்டியிலே அடித்து படைத்த சாதனை – என்ன தெரியுமா ?

Southee
- Advertisement -

இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது காலேவில் நடந்து வருகிறது.

Southee 1

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 249 ரன்கள் குவித்தது. அதன்பின் இலங்கை அணி முதல் இன்னிங்சில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 227 ரன்கள் குவித்து இருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை சேர்ந்த சவுதி டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஒரு சிறப்பான சாதனையை படைத்தார்.

அந்த சாதனை யாதெனில் நியூசிலாந்து அணியை சேர்ந்த சவுதி நேற்றைய போட்டி போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலம் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் 200 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று மொத்தம் 69 சிக்சர்களை அடித்து உள்ளார்.

Southee 2

ஆனால் டிம் சவுதி 66 போட்டிகளில் விளையாடி 69 சிக்சர்கள் விளாசி சச்சின் சாதனையை சமன் செய்தார். சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மெக்கல்லம் 107 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், கில்கிரிஸ்ட 100 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், கெயில் 98 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement