ஐ.பி.எல் தொடரின் போது ஏற்பட்ட கொரோனா குறித்து கண்ணீருடன் பேசிய நியூசி வீரர் – விவரம் இதோ

Seifert

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது, தொடரின் பாதியிலேயே வீரர்களிடையே கொரானா தொற்று ஏற்பட்டதையடுத்து காலவரையன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த தொடர் ஆரம்பித்து 29 போட்டிகள் முடிவடைந்திருந்தபோது, முதல் கொரனா தொற்று கொல்கத்தா அணியின் ஸ்பின் பௌலரான வருண் சக்கரவர்த்திக்கு உறுதி செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து அந்த அணியின் மற்றொரு வீரரான சந்தீப் வாரியருக்கும் கொரனா தொற்று ஏற்பட்டதால், அன்றைய தினத்தன்று நடைபெற இருந்த லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளே டெல்லி அணியின் அமித் மிஸ்ரா மற்றும் சன் ரைசர்ஸ் அணியின் விருத்திமான் சாஹா ஆகியோருக்கும் கொரானா தொற்று உறுதியாகவே, வீரர்களை நலனை மனதில்கொண்ட பிசிசிஐ, நடப்பு ஐபில் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்ததோடு மட்டுமல்லாமல், தொடரின்போது கொரான பாதித்த வீரர்களை தவிர்த்து மற்ற அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வீரர்கள் அனைவரையும் அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தது.

sandeep

இந்த தொடரில் கொரானா பாதித்த வீரர்களில் ஒருவரானா, நியூசிலாந்து அணியைச் சேர்ந்த டிம் செய்ஃப்ரட், சில நாட்களுக்கு முன்புதான் கொரனா தொற்றிலிருந்து முழுமையாக குணமாகி தன்னுடைய சொந்த நாடான நியூசிலாந்திற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் கொரானா தொற்று உறுதியானபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்று அவரிடம் ஒரு நேரலையில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், பேட்டியின்போதே கண்ணீர் விட்டு அழத் தொடங்கிவிட்டார். அதில் அவர் கூறியதாவது (கண்ணீருடன்),

- Advertisement -

கொரானா பரிசோதனையின் முடிவில், எனக்கு தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது என்ற செய்தியை கேட்டதும், எனக்கு இந்த உலகமே நின்றுவிட்டதைப் போல் இருந்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைக் கூட என்னால் யோசிக்க முடியவில்லை. அதுதான் நான் வாழ்க்கையில் அதிகமாக பயந்த தருணம். எல்லோருக்கும் வாழ்க்கையில் சில மோசமான முடிவுகள் பற்றி தெரிய வரும், அதுபோன்ற ஒரு முடிவைத்தான் அன்று நான் தெரிந்துகொண்டேன் என்று அவர் கூறினார்.
தற்போது டிம் செய்ஃப்ரட் தனது வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைபடுத்தலில் இருக்கிறார். இந்த பேட்டியை அளித்தபோது ஆரம்பத்தில் அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

Seifert

அதன் பிறகு தன்னை ஆசுவாசிப்படுத்திக் கொண்ட அவர் அந்த பேட்டியில் மேலும் கூறியதாவது, கொல்கத்தா அணியின் தலைமைப் பயிற்சியாளரான பிரண்டன் மெக்கல்லமும், சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ப்ளமிங்கும் எனக்கு நிறைய நேர்மறையான ஆறுதல்களை வழங்கினர். நிச்சயமாக நான் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்ற நம்பிக்கையை அளித்தனர். ஆரம்பத்தில் அந்த நேரங்கள் மிகவும் கடிமானதாக சென்றது. பின்பு சில நாட்களில் அது எல்லாமும் மறைந்துபோனதால் நான் சிறது அமைதியானேன் என்று அவர் கூறினார்.

- Advertisement -

ப்ரென்டன் மெக்கல்லமும், ஸ்டீபன் ப்ளமிங்கும் நியூசிலாந்து நாட்டவர்கள் என்பதால், கொரானா பாதித்த டிம் செய்ஃப்ரட்டுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் கடமை அப்போது அவர்களுக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களும் சில நாட்களிலேயே இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு வந்து விட்டனர். மீதமிருந்த நாட்களை டிம் செய்ஃப்ரட் இந்தியாவில் தனிமையில் தான் நகர்த்தினார்.

seifert 1

தற்போது தனது வீட்டில் தனிமையில் இருக்கும் அவருக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதைப் பற்றி பேசிய அவர், என் வருங்கால மனைவி நான் உடல் நலம்பெற்று திரும்ப வந்ததை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார். இன்னும் சில நாட்களில் நாங்கள் இருவரும் இணைந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செயவதாக இருக்கிறோம் என்று அவர் அந்த நேரலையில் கூறியிருக்கிறார்.

Advertisement