கேப்டன்னா என்னவேணுனாலும் பண்ணலாமா ? வார்னர் என்ன பண்ணாரு – பெயினை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

Paine
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அடிலெய்ட் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

Aus

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பெயின் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வரும் தொடக்க வீரராக வார்னர் மற்றும் பர்ன்ஸ் களம் இறங்கினார்கள். 4 ரன்கள் எடுத்திருந்தபோது பர்ன்ஸ் ஆட்டம் இழந்தார். அதன்பிறகு அவருடன் இணைந்த லபுசாக்னே சிறப்பாக ஆடினார். இவர்கள் இருவரது நிதானமான ஆட்டத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 304 ரன்களை குவித்து இருந்தது.

- Advertisement -

இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள். இந்நிலையில் நேற்று ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் லபுசாக்னே 162 ரன்களுக்கு ஆட்டம் இழக்க அதனைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் ஒருபக்கம் தொடர்ந்து நிலைத்து நின்று அதிரடியாக ஆடி வந்த வார்னர் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார். இரட்டை சதம் அடித்து அதனை தாண்டி முச்சசத்தை வேகவேகமாக நெருங்கினார்.

Warner

பாகிஸ்தான் கேப்டன் பந்துவீச்சாளர்களை மாற்றியும் வேலைக்கு ஆகவில்லை சிறப்பாக விளையாடிய வார்னர் முச்சதம் விளாசினார். இதுவே டெஸ்ட் போட்டியில் அவரது முதல் முச்சதமாகும். அதன் பின்னரும் அதிரடியாக தொடர்ந்து வார்னர் ஆடினார். இந்நிலையில் திடீரென வார்னர் 335 ரன்கள் அடித்து இருந்தபோது ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

Warner

இந்த அறிவிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை ஏனெனில் வார்னர் இவ்வளவு சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் போது இன்னும் கூடுதலாக ஒரு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் கொடுத்திருந்தால் டெஸ்ட் போட்டிகளில் 400 ரன்கள் என்ற மிகப்பெரிய லாராவின் சாதனையை வார்னர் நிச்சயம் முறியடித்து இருப்பார் என்று ரசிகர்கள் நினைக்கின்றனர். அதனால் பெயினை ஆஸி ரசிகர்கள் இணையத்தில் வசைபாடியும் வருகின்றனர்.

Warner-1

வார்னர் ஒன்றும் பந்துகளை விரையம் செய்து விளையாடவில்லை அவர் ஆடிக்கொண்டிருந்த விதத்தை பார்க்கும் பொழுது விரைவில் அவர் 400 எட்டியிருப்பார் எனவே அவருக்கான நேரத்தை அவரிடம் கூறி அவருக்கு குறிப்பிட்ட நேரத்தை வழங்கி இருக்க வேண்டும் அதைச் செய்யாமல் பெயின் டிக்ளேர் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement