- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான தொடர் எப்போது வந்தாலும் நான் இதைத்தான் நினைப்பேன் – டிம் பெயின் ஓபன் டாக்

இந்திய அணி கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வரலாற்றில் முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

ஆனால் இந்த தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இடம்பெறவில்லை இதன் காரணமாகவும் அந்த அணி தோற்று இருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த வருடம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது குறித்து ஆஸி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இரண்டு தரமான அணிகளும் மோதும் போது ஆட்டம் சூடு பிடிக்கும் .அந்த கிரிக்கெட் தொடர் முழுவதும் பரபரப்பாக இருக்கும்.

ஏனென்றால் கிரிக்கெட் தொடர் முன்னர் என்ன நடந்தது என்பதைப் பற்றி அல்ல. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் தொடர் ஒரு மினி ஆஷஷ் கிரிக்கெட்டை போன்றது என்று கூறியுள்ளார். மேலும் இந்திய அணிக்கு எதிரான தொடர் எப்போதும் எங்களுக்கு சவாலான ஒன்று தான் என்றும் பெயின் கூறினார்.

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடயேயான போட்டி எப்போது நடைபெற்றாலும் வீரர்களிடையே நடைபெறும் மோதலும் பெரிய அளவில் ரசிகர்களை கவரும். அந்த வகையில் கடந்த ஆண்டு இந்திய அணியின் விக்கெட் கீப்பரான பண்ட் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் இடையே நடந்த மோதல் அந்த தொடர் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆஸ்திரேலிய அணிக்கு தற்போது ஐ.பி.எல் முடிந்து இந்திய அணியுடன் மோத இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by