- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் சர்மா, கோலி எல்லாம் பிரச்சனை கிடையாது.. இந்திய அணிக்கு இப்போ இவர்தான் பிரச்சனை – டிம் பெயின்

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு முன்னதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது மோசமான பாட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தலாம் என்று பலரும் பேசி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பேசியிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கூறுகையில் :

கம்பீர் தான் தற்போதைக்கு இந்திய அணியின் பிரச்சனை :

கடந்த இரண்டு வருடங்களில் விராட் கோலி 3 சதம்தான் அடித்திருக்கிறார். இதே வேறொரு அணியாக இருந்தால் அவர் நிச்சயம் வெளியேற்றப்பட்டு இருப்பார் ஆனாலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடலாம் என்பதற்காக இந்த தொடர் அவருக்கு முக்கியமான தொடராக அமையலாம் என்று கருத்து கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த கருத்தினை விமர்சித்து பேசியிருந்த இந்திய அணியின் பயிற்சியாளரான கம்பீர் கூறுகையில் : முதலில் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியா அணி குறித்து யோசிக்கட்டும். அதன் பின்னர் மற்ற அணிகளை பற்றி பேசலாம் என்று தடாலடியாக பதிலடி கொடுத்திருந்தார். அவரது இந்த கருத்து பலது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த வேளையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் டிம் பெயினும் கம்பீரின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

கம்பீர் அப்படி பேசியது எனக்கு பிடிக்கவில்லை. ரிக்கி பாண்டிங்கை அவர் இன்னும் எதிரணியின் வீரராகவே நினைக்கிறார். ஆனால் பாண்டிங் தற்போது கிரிக்கெட் வர்ணனையாக உள்ளார். அவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கீழ் சம்பளத்தை பெற்றுக் கொண்டு பேசியிருக்கிறார் என்பதை கம்பீர கவனிக்கவில்லை. தற்போதைய இந்திய அணியை பொறுத்தவரை எந்த வீரரின் பார்மும் சரியாக இல்லை என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது ஃபார்ம் கவலைக்குரிய விடயமாக இல்லை என்றே நான் நினைக்கிறேன். அதைவிட தற்போதைக்கு இந்திய அணியின் பிரச்சனை யாதெனில் : கம்பீருடைய அமைதியற்ற குணம் தான் என்று நினைக்கிறேன். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணியின் வீரர்களை உற்சாகப்படுத்தி விளையாட வைத்தார்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாதது குறித்து பேசிய – ஷர்துல் தாகூர்

அதனால் கடந்த இரண்டு முறையும் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியது. ஆனால் தற்போதைய புதிய பயிற்சியாளர் கம்பீர் அணியை வழிநடத்தும் விதத்தை பார்த்தால் அவருடைய பாணியே சரியில்லை என்றும் அவர்தான் தற்போது இந்திய அணிக்கு பிரச்சனை என்றும் டிம் பெயின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -