ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக அங்கு சென்றடைந்து தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது வரும் நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் நகரில் துவங்க இருக்கிறது.
என்னிடம் யாருமே பேசவில்லை – ஷர்துல் தாகூர் :
இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட வேளையில் அதில் காயத்தில் இருந்து மீண்டிருந்த ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூருக்கு இடம் அளிக்கப்படவில்லை. வேகப்பந்துவீச்சு ஆள்ரவுண்டராக பார்க்கப்படும் ஷர்ர்துல் தாகூர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருந்தும் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை.
அவருக்கு பதிலாக இந்திய அணி தற்போது புதிய வீரராக நிதீஷ் குமார் ரெட்டியை தேர்வு செய்து அங்கு அழைத்துச் சென்றுள்ளது. ஷர்துல் தாகூர் சமீபத்தில் அடைந்த காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பி உள்ள வேளையில் பந்துவீச்சில் பெரியதாக தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் பேட்டிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்காக தான் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசியுள்ள ஷர்துல் தாகூர் கூறுகையில் : ஆஸ்திரேலியா தொடர் குறித்து யாரும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை. நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது நல்ல முறையில் திரும்பி விட்டேன். ஆனாலும் எனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இருந்தபோதிலும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது நான் சிறந்த முறையில் மீண்டும் தயாராகி உள்ளேன். கடந்த சில மாதங்களாக நான் பந்துவீச்சிலும் சிறப்பாக முன்னேறி வருகிறேன். என்னுடைய உடற்பகுதி தற்போது முன்பை விட மேம்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா தொடர் என்பது மிகவும் பெரிய தொடர். எனவே அங்கிருந்து எப்போது வேண்டுமானாலும் எனக்கு அழைப்பு வரலாம்.
இதையும் படிங்க : இந்திய அணியின் துவக்க வீரருக்கான இடம் யாருக்கு? முடிவு அவங்ககிட்ட தான் இருக்கு – சூரியகுமார் யாதவ் வெளிப்படை
அதேபோன்று இங்கிலாந்து அணி இங்கு வந்து இந்திய மண்ணில் விளையாட இருக்கிறது. அதற்கு அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் இருக்கிறது இப்படி அடுத்தடுத்த தொடர்கள் இருப்பதால் நிச்சயம் ஏதாவது ஒரு தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ஷர்துல் தாகூர் பேசியது குறிப்பிடத்தக்கது.



