இந்திய அணியின் துவக்க வீரருக்கான இடம் யாருக்கு? முடிவு அவங்ககிட்ட தான் இருக்கு – சூரியகுமார் யாதவ் வெளிப்படை

Openers
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க அங்கு பயணித்து உள்ளதால் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்திய டி20 அணியின் துவக்க வீரர்கள் யார்? :

இந்த தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்களை விளாசியுள்ளதால் அவர் தொடர்ச்சியாக துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால் இந்திய டி20 அணியை பொறுத்தவரை ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர்தான் துவக்க வீரர்களாக முதன்மை அணியில் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இதன் காரணமாக எதிர்வரும் தொடர்களில் இந்திய அணியின் துவக்க வீரர்களுக்கான ஜோடி எவ்வாறு இருக்கும்? என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. ஏனெனில் ஒருபுறம் ஜெய்ஸ்வால் மிகச் சிறந்த இடதுகை துவக்க வீரர் என்பதனால் அவரது இடம் உறுதியாகியுள்ளது. அதே வேளையில் மற்றொரு துவக்க வீரருக்கான இடத்தில் தற்போது சுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜெய்ஸ்வாலுடன் களமிறங்கி விளையாடப்போகும் மற்றொரு துவக்க வீரர் யார்? என்ற கேள்வி நேற்றைய தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் எழுப்பப்பட்டது : இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக நாங்கள் சில டி20 போட்டிகளில் விளையாடியிருந்தோம். அப்போது எந்த பாணியில் டி20 கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது குறித்து நிறைய பேசியிருந்தோம்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடும் நாங்கள் தேசிய அணிக்காக விளையாடும் போது ஒன்றாக இணைந்து விளையாடுகிறோம். என்னை பொறுத்தவரை எதிர்வரும் தொடர்களில் இந்திய அணியின் டி20 அணியின் துவக்க வீரர்களாக யார் இருப்பார்கள்? என்று இன்னும் யோசிக்கவில்லை. இது குறித்து பயிற்சியாளருடன் அமர்ந்து பேசும்போது நிச்சயம் ஒரு கடினமான முடிவாக தான் இருக்கும் என்று கருதுகிறேன்.

இதையும் படிங்க : அபிஷேக், சாம்சன், திலக் வர்மா யார் சூப்பரா பேட்டிங் பண்ணாங்க? – சூரியகுமார் யாதவ் அளித்த பதில்

ஏனெனில் தற்போதைய அணியில் 20 வீரர்கள் மிகச் சிறப்பாக இருப்பதால் அவர்களில் 15 பேரை தேர்வு செய்து அதிலிருந்து பிளேயிங் லெவனை தேர்வு செய்வது என்பது சவாலான விடயம். எனவே நிச்சயம் இந்த விடயத்திற்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு ஆகியர்தான் முடிவெடுக்க வேண்டும் என்பதனால் எனக்கு எவ்வித தலைவலியும் இருக்காது என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement