இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்கள் என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கி இருந்தது.
யாருடைய பேட்டிங் சிறந்தது? :
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அபிஷேக் சர்மா 36 ரன்களையும், சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 109 ரன்களையும், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 120 ரன்களையும் குவித்திருந்தனர். பின்னர் 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மாபெரும் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே திணறியது.
இறுதியில் 18.2 ஓவர்களை மட்டுமே சந்தித்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்ததால் 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களின் ஆட்டம் குறித்து பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : இந்த போட்டியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரில் யாரது இன்னிங்ஸ் சிறந்தது என்று சொல்வது கடினம். ஏனெனில் அனைவருமே மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தியிருந்தனர்.
அதனால் மூவருமே இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் என்று கூறுவேன். கடந்த முறை நாங்கள் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்புற பயணம் மேற்கொண்ட போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதன்படியே இம்முறையும் டர்பனுக்கு நாங்கள் வந்து இறங்கிய போது சிறப்பாக விளையாட தீர்மானித்தோம்.
இதையும் படிங்க : ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் முக்கிய முடிவை கையிலெடுத்த ரோஹித் சர்மா – வெளியான தகவல்
அந்த வகையில் இந்த தொடரை தற்போது வெற்றிகரமாக முடித்ததில் மகிழ்ச்சி. நான் எங்களது அணியின் வீரர்களிடம் எப்போது பேசும்போதும் உங்களுடைய ஆட்டம் எப்படி இருக்கிறதோ? உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ? அதை சுதந்திரமாக செய்யுங்கள் என்ற நம்பிக்கையை மட்டும் தொடர்ந்து அளித்து வருவதாக சூர்யகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



