உலகக்கோப்பை டி20 தொடரில் இந்த அணி விளையாட வாய்ப்பே இல்லை – டிம் பெயின் ஓபன்டாக்

Paine

இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என்று ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் கூறியுள்ளார்.

cup

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது : ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட்டிற்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதன் காரணமாக இனி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மற்ற அணிகள் விளையாடுவதற்கு மறுப்பு சொல்லவும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

தாலிபான்களின் முடிவால் நவம்பர் மாதம் நடைபெற இருந்த ஆஸ்திரேலிய – ஆப்கானிஸ்தான் தொடரும் தற்போது ரத்து செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பதை வரவேற்றுள்ள அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிப்படி டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் மகளிர் அணியும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமான ஒன்று என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக நிச்சயம் அவர்கள் உலக கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை என்றும் டிம் பெயின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement