இந்தியாவுல நீங்க டாப் தான். ஆஸ்திரேலியா வாங்க பாத்துக்குறேன் – கோலிக்கு சவால் விட்ட பெயின்

paine

ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் பிரிஸ்பேனில் நடைபெற்ற ஒரு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தற்போது 116 புள்ளிகளுடன் இந்திய அணிக்கு அடுத்த இடமான இரண்டாவது இடத்தில் உள்ளது.

Pak va Aus

இந்தப் போட்டி முடிந்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சீண்டிய வண்ணம் ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : அடுத்த ஆண்டு இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுவது குறித்து கோலி தான் பதில் கூற வேண்டும்.

இது குறித்து கோலி நல்ல மன நிலையில் இருக்கும்போது காபாவில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவு எடுத்து சொல்லட்டும் அவரிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன். காபா மைதானத்தில் அனைத்து எதிர் அணியை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். என்று பெயின் கூறினார்.

Cup

தற்போது இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்கிறது தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் நிலையில் இந்திய அணியின் வெற்றி களை உதாசீனப்படுத்தும் வகையாக இந்திய அணியின் கேப்டன் கோலியை அவர் சீண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது இந்திய அணி இருக்கும் பார்முக்கு ஆஸ்திரேலிய சென்றாலும் ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களை வீழ்த்தும் திறமை இந்திய அணியிடம் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

- Advertisement -