அடிமேல் அடி வாங்கும் ஆஸி வீரர்கள்…இவர் கிரிக்கெட் வாழ்கையும் முடிவுக்கு வருகிறதா ? …சோகத்தில் ரசிகர்கள் !

painne
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக பழைய கேப்டன் ஸ்மித்திற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.இதன்காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பரான டிம் பெய்னி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

paine

- Advertisement -

ஆனால் நான்காவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது அவருக்கு கைவிரலில் ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து இதுவே அவரது கிரிக்கெட் வாழ்வின் கடைசி போட்டியாக இருக்கும் என செய்திகள் வெளிவந்துள்ளன.இதனால் ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சியடைந்துள்ளன.

இந்த தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் ஆஸ்திரேலியாவிற்கு வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு தொடராக அமைந்துவிடும் போல.ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகின்றது.

 

- Advertisement -

இதில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேன்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணைக்கேப்டன் வார்னருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஓராண்டு தடையும் பேன்கிராப்ட்க்கு 9மாத தடையும் விதித்தது.

இந்நிலையில் தான் நான்காவது டெஸ்ட் போட்டியிக்கு ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் டிம் பெய்னி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.நான்காவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது சாயர்ஸ் வீசிய பந்தை தென்ஆப்பிரிக்காவின் குவிண்டன் டி காக் அடிக்க அது அவுட் சைட் எட்ஜ் ஆக பெய்னி பந்தை பிடிக்க முற்பட்டபோது கைவிரலில் பட்டு காயம் ஏற்பட்டது.

tim

உடனடியாக மருத்துவர்கள் பெய்னியை சோதனை செய்த போது அவருக்கு வலது கையின் கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.ஏற்கனவே பெய்னிக்கு கடந்த 2010-ம் ஆண்டில் டிர்க் நன்னீஸ் வீசிய பந்தை ஆடமுற்பட்டபோது கை விரல்கள் முறிந்தன. இதை குறிப்பிட்டு நேற்றைய தினம் பெய்னிக்கு ஏற்பட்ட கைவிரல் காயத்தை ஒப்பிட்டு இது தான் பெய்னிக்கு கடைசி போட்டியாக இருக்கும் என எழுதியுள்ளன. இருப்பினும் பெய்னி நிதானமாக ஆடி 62 ரன்களை எடுத்தார். ஆனாலும் காயம் காரணமாக விக்கெட்கீப்பிங் செய்யமுடியாமல் திணறினார்.

Advertisement