விராட் கோலியை நாங்கள் வம்பிழுக்காததற்கு காரணம் இதுதான் – டிம் பெயின் விளக்கம்

Paine
- Advertisement -

விராட் கோலியை சீண்டிவிட்டால் அவர் எவ்வளவு ஆக்ரோஷமாகவும் அபாரமாகவும் விளையாடுவார் என்று கிரிக்கெட் உலகத்திற்கே தெரியும். அதனால் தான் அவரை வம்பிழுத்து சர்ச்சையை உண்டாக்கி வில்லை என ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார். கடந்த வாரம் ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் :

Clarke

தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் ஒப்பந்தங்களை மனதில் வைத்து விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற பெரிய இந்திய வீரர்களை சீண்டுவதில்லை. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் வழக்கமான ஆக்ரோஷமான பாணி மறைந்து விட்டது எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

- Advertisement -

விராட் கோலியை சீண்டிவிட்டால் பெங்களூரு அணியில் இடம் கிடைக்காது எனவும் அவர் பேசியிருந்தார். இதற்கு பேட் கம்மின்ஸ் மற்றும் பல்வேறு ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் இந்த சர்ச்சை பேச்சிற்கு ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் டிம் பெய்ன் விளக்கம் அளித்துள்ளார்.

paine 1

இதுகுறித்து அவர் கூறியதாவது : இந்தியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலியிடம் நல்ல விதமாக நடந்து கொண்ட எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரும் இல்லை. நாங்கள் யாரையும் பார்த்து பயப்படவில்லை. அப்படி ஏதும் நடக்கவில்லை. பேட்டிங் பந்துவீச்சு என அனைவரும் வெற்றியாக்காகவே உழைத்தனர்.

- Advertisement -

விராட் கோலியிடம் யார் நட்பு பாராட்டினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என்று மட்டும் முடிவெடுத்தோம். ஏனெனில் அவரை சீண்டிவிட்டால் அவர் ஆக்ரோஷமாகவும் அபாரமாக விளையாடுவார் என்று அனைவருக்கும் தெரியும். விராட் கோலிக்கு பந்து வீசும்போது எந்த ஒரு வீரரும் ஐபிஎல் ஒப்பந்தத்தை எண்ணிப் பார்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

paine 2

சொந்த நாட்டின் முன்னாள் கேப்டன் என்றும் பாராமல் அவர் செய்த தவறை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சுட்டிக்காட்டி தங்களது பதிலை அழுத்தம் திருத்தமாக அவருக்கு கூறியுள்ளார்கள். கிளார்க்கின் இந்த கருத்து முற்றிலும் தவறானது என தற்போது அணியில் உள்ள வீரர்கள் பலரும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement