வெறும் 9 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளி வீசி உலக சாம்பியனை படுக்க வைத்த – அயர்லாந்து பவுலர்

ire

இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்ற பிறகு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக இன்று விளையாடி வருகிறது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

ire-2

நான்கு நாட்கள் மட்டுமே நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க காரர்கள் பர்ன்ஸ் 6 ரன்களும், ராய் 5 ரன்களும் எடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

அதன் பிறகு வந்த அனைவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 23.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து வெறும் 85 ரன்களை மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலக சாம்பியனான இங்கிலாந்து அணி கத்துக்குட்டி அணியான அயர்லாந்து அணியிடம் தடுமாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ire-1

இந்த போட்டியில் அயர்லாந்து அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டிம் முர்டாக் 9 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக அந்த 9 ஓவர்களில் 2 ஓவர்களை அவர் மெய்டன் ஓவர்கள் வீசி ஏதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து நாட்டை பூர்விகமாகக் கொண்ட அவர் இங்கிலாந்தில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் அயர்லாந்து அணிக்காக விளையாடி தற்போது இங்கிலாந்து அணியை சாய்த்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement