எனக்கு மட்டும் அந்த வாய்ப்பை ஆர்.சி.பி அணி கொடுத்தா இன்னும் சூப்பரா ஆடுவேன் – டிம் டேவிட் பேட்டி

Tim David
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்க ப்ளீஸ் : ஆட்டநாயகன் டிம் டேவிட்

இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக மழை பெய்ததால் இந்த போட்டியானது 14 ஓவர்கள் மட்டுமே கொண்ட போட்டியாக நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக டிம் டேவிட் 26 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 50 ரன்களையும், ரஜத் பட்டிதார் 23 ரன்களையும் குவித்திருந்தனர். பின்னர் 96 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 12.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக நேஹல் வதேரா 33 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 16 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் அந்த அணி சார்பாக தனி ஒருவராக நின்று அரைசதம் அடித்த டிம் டேவிடிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த ஆட்டம் குறித்து பேசிய டிம் டேவிட் கூறுகையில் :

- Advertisement -

உண்மையிலேயே இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. டாப் ஆர்டரில் பேட்டிங் செய்த வீரர்கள் என்னிடம் வந்து மைதானத்தில் உள்ள சவாலை பகிர்ந்திருந்தனர். இந்த ஆடுகளத்தில் அப்படி என்ன நடக்கிறது என்பதை பார்த்தேன். பயிற்சியில் ஈடுபடும் பிட்ச் போன்று தான் இந்த ஆடுகளமும் இருந்தது. இந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக விளையாடியதாக உணர்கிறேன். ஆனாலும் நான் ஆர்.சி.பி அணிக்காக முன்கூட்டியே டாப் ஆர்டரில் இறங்கினால் என்னுடைய மிகச் சிறப்பான பங்களிப்பை என்னுடைய அணிக்காக வழங்க முடியும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : அது பஞ்சாப்புக்கு சாதகமாகிடுச்சு.. பிட்ச் நல்லா இருந்தும் தோற்க இதான் பெரிய காரணம்.. ஆர்சிபி கேப்டன் படிதார்

பின் வரிசையில் களமிறங்குவதால் பவுலர்களுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைப்பது சவாலாக இருக்கிறது. அதனால் சற்று முன்கூட்டியே களமிறங்கும் பட்சத்தில் என்னால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என டிம் டேவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement