அவங்க 2 பேரும் எனக்கு பின்னாடி இருந்தாங்க.. அதனால் தான் அடித்து நொறுக்கினேன் – ஆட்டநாயகன் டிம் டேவிட் பேட்டி

Tim David
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 43 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தியது. அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆர்.சி.பி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

தன்னுடைய அதிரடி ஆட்டம் குறித்து பேசிய : டிம் டேவிட்

பின்னர் தொடர்ந்து விளையாடிய சி.எஸ்.கே அணி 207 ரன்களுக்கு சுருண்டதால் பெங்களூரு அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பெங்களூர் அணி சார்பாக ஐந்தாவது வீரராக களமிறங்கிய டிம் டேவிட் 25 பந்துகளை மட்டுமே சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் என 77 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் விளையாடிய விதம் குறித்து பேசிய டிம் டேவிட் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் அதிரடியாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் களமிறங்கும் போது ரஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார். நான் அவரிடம் இருந்து பந்துகளை வாங்கி அதிரடியாக விளையாடி எதிரணியின் பந்து வீச்சாளர்களை அழுத்தத்தில் கொண்டு செல்ல முயற்சித்தேன். அந்த வகையிலேயே என்னுடைய ஆட்டத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் என்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்.

அதேபோன்று இந்த போட்டியில் சற்று நீண்ட இன்னிங்க்ஸை விளையாட வேண்டும் என இறுதிவரை களத்தில் நிற்க முயற்சித்தேன். எனக்கு பின்னால் ஜிதேஷ் ஷர்மா, ரோமாரியோ ஷெப்பர்டு போன்ற 2 வீரர்கள் இருந்ததால் எனக்கு மேலும் நம்பிக்கை இருந்தது. ஐபிஎல் போட்டிகளுக்காக நான் தயாராகி வரும்போது தினேஷ் கார்த்திக் பவர் ஹிட்ங்கில் எனக்கு நிறைவே உதவி செய்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியை இப்படி வீழ்த்தியதில் நிம்மதியா இருக்கு.. வெற்றிக்கு பிறகு – ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி

பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவருடைய ஆலோசனைகள் என்னுடைய பேட்டிங்கிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகளாக நான் விளையாடி வருகிறேன். அதற்காக சரியான முறையில் பயிற்சியும் எடுத்து வருகிறேன். இனிவரும் போட்டியிலும் இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தை தொடர்வேன் என டிம் டேவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement