எதிர்வரும் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிவரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு :
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் ஆஸ்திரேலியா அணி ஒரு பெரிய பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆஸ்திரேலியா அணி பலமான அணியை அறிவிக்க காத்திருக்கிறது.
இவ்வேளையில் இந்த டி20 உலக கோப்பை தொடரானது துவங்க ஒரு மாதமே இருக்கும் இடைவெளியில் அந்த அணியின் நட்சத்திர அதிரடி பேட்ஸ்மேனான டிம் டேவிட் காயம் காரணமாக விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுகுறித்த தகவல்களும் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏனெனில் பிக்பாஸ் தொடரில் விளையாடி வந்த டிம் டேவிட் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய எத்தனை நாட்களாகும்? என்பது குறித்த தெளிவான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
அதனால் அவர் இந்த டி20 உலக கோப்பை தொடரை தவறவிடவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அவர் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட முடியாமல் போனால் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடையை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2026: சிஎஸ்கே அணியை மினி இந்திய அணின்னே சொல்லலாம்.. பிளேயிங் லெவன் பற்றி ஆகாஷ் சோப்ரா
ஏற்கனவே அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வேளையில் டிம் டேவிட்டும் இந்த டி20 உலககோப்பை தொடரில் விளையாட முடியாமல் போனால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.



