
மிட்சல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த முதலாவது போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான டிம் டேவிட் இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார்.
அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் கடந்த முதலாவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலியா அணிக்காக ஐந்தாவது வீரராக களமிறங்கிய டிம் டேவிட் 52 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 83 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக அவர் 50 பந்துகளுக்கு மேல் விளையாடியுள்ளார். அது தவிர்த்து சூரியகுமார் யாதவின் மாபெரும் சாதனையும் அவர் தகர்த்துள்ளார். அந்த வகையில் டிம் டேவிட் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதுவரை சர்வதேச டி20 போட்டிகளை பொறுத்தவரை அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வரும் வீரராக இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலிடத்தில் இருந்தார். சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 167.07 என்கிற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வந்தார். தற்போது அவரை முந்தியுள்ள :
இதையும் படிங்க : வேற வழியில்ல இதுக்காக அஸ்வினை சிஎஸ்கே கழற்றி விட்டாகனும்.. சாம்சன் வந்தா குழப்பமாகும்.. பத்ரிநாத் பேட்டி
டிம் டேவிட் 167.37 என்கிற ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடியாக விளையாடும் வீரராக முதலிடத்தினை பிடித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை நெருங்கி வரும் வேளையில் தனது அதிரடியை ஆரம்பித்துள்ள டிம் டேவிட் நிச்சயம் டி20 உலக கோப்பையில் அனைத்து அணிகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாக இருப்பார் என்பது உறுதி.