- Advertisement -
ஐ.பி.எல்

ஆண்ட்ரே ரசலுக்கு அடுத்து 2 ஆவது வீரராக டிம் டேவிட் நிகழ்த்திய இமாலய சாதனை – விவரம் இதோ

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 26-ஆவது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

டிம் டேவிட் நிகழ்த்திய அசத்தல் சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக பில் சால்ட் 63 ரன்களையும், டிம் டேவிட் டேவிட் 26 ரன்களையும் குவித்தனர். பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக ஐந்தாவது வீரராக களமிறங்கிய டிம் டேவிட் 17 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 26 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் இன்றைய போட்டியில் அடுத்த 26 ரன்களின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

இன்றைய போட்டிக்கு முன்னதாக 55 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியிருந்த டிம் டேவிட் 993 ரன்களை குவித்திருந்தார். இவ்வேளையில் இன்று தனது 56-வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய அவர் 7 ரன்களை தொட்ட போது ஐபிஎல் போட்டிகளில் 10000 ரன்களை பூர்த்தி செய்தார். அவர் அடித்த இந்த 1000 ரன்கள் மூலம் தான் ஐபிஎல் போட்டிகளில் ஒரு இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ரா இந்த பிரச்சனையை மட்டும் சரி செய்தால் தானாக விக்கெட்டுகள் கிடைக்கும் – இர்பான் பதான் அறிவுரை

அதாவது ஐபிஎல் போட்டிகளில் முதல் 1000 ன்களை குறைந்த பந்துகளில் அடித்த வீரராக ஆண்ட்ரே ரசல் 545 பந்துகளில் அடித்து முதலிடத்தில் இருக்கும் வேளையில் அவருக்கு அடுத்து டிம் டேவிட் 560 பந்துகளில் ஆயிரம் ரன்களை கடந்து அதிவேகமாக ஆயிரம் ரன்களை அடித்த வீரர் என்ற சாதனை பட்டியலில் இரண்டாவது வீரராக இடம் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் டிராவிஸ் ஹெட் மற்றும் பில் சால்ட் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -