இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த ஆர்.சி.பி அணி இந்த ஆண்டும் தங்களது ஆதிக்கத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி லீக் போட்டிகளின் முடிவில் முதலிடத்தை பிடித்து முன்னேறியது. பின்னர் பிளேஆப் சுற்றில் குவாலிபயர் மற்றும் இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
டிம் டேவிடுக்கு விதிக்கப்பட்ட தடை :
ஆர்.சி.பி அணி பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தற்போது ஆர்.சி.பி அணி பலமான அணியாக மாறியுள்ளதால் இனி அவர்கள் நிச்சயம் தொடர்ந்து கோப்பைகளை வெல்லவும் வாய்ப்பு இருப்பதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் அவர்களை பாராட்டி வருகின்றனர். கடந்த இரண்டு சீசங்களாகவே ஆர்.சி.பி அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அற்புதமான வெற்றிகளை குவித்து வருகிறது.
அந்த வகையில் ஆர்.சி.பி அணிக்காக பினிஷர் ரோலில் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரராக டீம் டேவிட் திகழ்ந்து வருகிறார். போட்டியின் பின் வரிசையில் களமிறங்கி ரன் குவிக்கும் அவர் ஆர்.சி.பி அணியின் பலமான வீரராகவும் பார்க்கப்படுகிறார். இவ்வேளையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 2027 ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் விளையாட டிம் டேவிட்க்கு பி.சி.சி.ஐ தடை விதித்துள்ளது.
இதற்கு காரணம் யாதெனில் : நடைபெற்று முடிந்த குஜராத் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு நாட் அவுட் வழங்கப்பட்ட போது மைதானத்தில் இருந்த களநடுவர் நிதின் மேனனை நோக்கி டிம் டேவிட் ஐஸ்பேக் ஒன்றினை வீசினார். இது ஐ.பி.எல் நடத்தையை மீறியதாகும் எனவே போட்டி நடைபெற்ற முடிந்த பின்னர் ஜவகர் ஸ்ரீநாத் முன்னிலையில் இந்த செயல் குறித்து விசாரிக்கப்பட்டது.
இதையும் படிங்க : 2027 ஐ.பி.எல் தொடரில் நிச்சயம் இந்த விடயத்தில் பல மாற்றங்கள் நடக்கும் – சுனில் கவாஸ்கர் கருத்து
அப்போது தனது குற்றத்தை டிம் டேவிட் ஒப்புக்கொண்டார். அதனால் அவருக்கு 50% அபராதமும் இரண்டு டி மெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டன. ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு முறை அவர் மூன்று டி மெரிட் புள்ளிகளை பெற்றுள்ளதால் மொத்தம் ஐந்து தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றுள்ளார். எனவே அதன் காரணமாக 2027 ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் அவருக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.



