சச்சினை அவுட் செய்த பிறகு எனக்கு கொலை மிரட்டல் வந்தது – மனம்திறந்த இங்கி பவுலர்

Sachin
- Advertisement -

146 வருட கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகள் படைத்தவர் சச்சின் டெண்டுல்கர் தற்போது வரை 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் அவர் தான் . ஆனால் நூறாவது சதத்தை அடிக்க சச்சின் டெண்டுல்கர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார். இதற்காகவே அவரது ஓய்வும் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நூறாவது சதம் அடிக்கும் போது சச்சின் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து அணியின் டிம் பிரஸ்னன் அதன் பின்னர் வந்த தாக்கங்களை பற்றி பேசியுள்ளார்.

Sachin 1

மேலும் தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக கூட கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 99 வது சதத்தை 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 99வது சதம் அடித்திருந்தார் . அதன் பின்னர் நூறாவது சதம் அடிப்பார் என்று இந்திய அணி 2 வருடமாக காத்துக்கொண்டிருந்தது.

- Advertisement -

அப்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 90 ரன்களை கடந்தார். வழக்கமாக 90 ரன்கள் எடுத்த பின்னர் தட்டுத்தடுமாறி ஒவ்வொரு ரன்களாக சேர்த்துக் கொண்டிருந்தார். சச்சின் டெண்டுல்கர் 91 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து அணியின் டிம் பிரஸ்ணன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார் சச்சின் டெண்டுல்கர்.

Bresnan

ஆனால் அப்போது உண்மையில் அந்த பந்து சச்சின் காலில்படவில்லை. பேட்டில் மட்டும் தான் பட்டது என பல சர்ச்சைகள் உருவானது . இந்நிலையில் இது குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார் டிம் பிரஸ்ணன். அவர் கூறுகையில் …

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் 91 ரன்கள் எடுத்திருந்தார். நான் அவரது விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினேன். அப்போது சிறிது நேரம் சந்தோஷமாக இருந்தது . அதன் பின்னர் வீட்டிற்கு சென்ற பின்னர் எனக்கு நிறைய போன்கால்கள் வந்தது. பலரும் கொலை மிரட்டல் விடுத்தார்கள். அப்போது ஏன் சச்சின் விக்கெட்டை எடுத்தேன் என்றெல்லாம் எனக்கு தோன்றிவிட்டது.

Bresnan 1

மேலும் சச்சின் டெண்டுல்கர் அவுட் என அறிவித்த நடுவர் ராட் டக்கருக்கும் கொலை மிரட்டல் வந்தது. இதனால் இருவரும் சேர்ந்து பாதுகாப்புக்காக காவல் துறையில் விண்ணப்பித்து இருந்தோம் என்று கூறியுள்ளார் டிம் பிரஸ்ணன்.

Advertisement