இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல.. சூர்யவன்ஷியை சீண்டிய இலங்கை வீரர்களுக்கு – திலக் வர்மா எச்சரிக்கை

Tilak Varma
- Advertisement -

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ கிரிக்கெட் அணியானது நேற்று இலங்கை ஏ அணிக்கு எதிரான முக்கிய லீக் ஆட்டத்தில் பங்கேற்று விளையாடி இருந்தது. இந்த போட்டியின் போது டாஸ் வென்ற இலங்கை ஏ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய ஏ அணியானது 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் குவித்தது.

வைபவ் சூர்யவன்ஷியிடம் இலங்கை வீரர்கள் நடந்து கொண்டது தவறு : திலக் வர்மா

பின்னர் தொடர்ந்து விளையாடிய இலங்கை ஏ அணியும் 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் குவித்ததால் போட்டி டையில் முடிவடைந்தது. பின்னர் சூப்பர் ஓவர் முறை நடைபெற்று அதில் இலங்கை ஏ அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி முடியும்போது இந்திய அணி தோற்றதிற்கு பின்னர் துவக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி மைதானத்திலிருந்து சோகத்துடன் வெளியேறினார்.

- Advertisement -

அப்போது இலங்கை வீரர்கள் அவருடன் சீண்டலில் ஈடுபட்டனர். அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி இலங்கை வீரர்கள் சீண்டலை துவங்கும் போது கோபமடைந்த சூரியவன்ஷி இலங்கை வீரர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இப்படி 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியிடம் இலங்கை வீரர்கள் மோசமாக நடந்து கொண்டது பலரது மத்தியிலும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய ஏ அணியின் கேப்டனான திலக் வர்மா இந்த சம்பவம் குறித்து பேசுகையில் கூறியதாவது : நான் யாருக்கும் இங்கு பாடம் எடுக்க வரவில்லை. 15 வயதான ஒரு வீரரிடம் இலங்கை வீரர்கள் நடந்து கொண்ட விதம் சரியல்ல. அங்கு சரியாக என்ன நடந்தது? என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : பி.சி.சி.ஐ ரஜத் பட்டிதார் விடயத்தில் செய்தது தவறு.. இன்னும் அவர் என்னதான் செய்யனும் – ஆகாஷ் சோப்ரா கேள்வி

சூரியவன்ஷி போட்டி முடிந்த பிறகு அமைதியாக பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இலங்கை வீரர்கள் தான் தேவையற்ற வார்த்தைகளை விட்டனர். இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல அதோடு இந்த சம்பவங்கள் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவுக்கும் நல்லதல்ல என திலக் வர்மா காட்டத்துடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement