பி.சி.சி.ஐ ரஜத் பட்டிதார் விடயத்தில் செய்தது தவறு.. இன்னும் அவர் என்னதான் செய்யனும் – ஆகாஷ் சோப்ரா கேள்வி

Aakash Chopra and Rajat Patidar
- Advertisement -

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அடுத்ததாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அண்மையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ மூலம் அறிவிக்கப்பட்டது. அப்படி வெளியான இந்திய அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையின் கீழ் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

ரஜத் பட்டிதார் இன்னும் என்ன தான் செய்யனும்? : ஆகாஷ் சோப்ரா

அந்த அணியில் சூரியகுமார் யாதவ் நீக்கப்பட்டதோடு சேர்த்து ரிங்கு சிங்கிற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேவேளையில் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்கள் சிலருக்கு இந்த இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்படி டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் தேர்வு செய்யப்படாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட வேளையில் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டனுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? என்று கேள்வியை முன் வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய டி20 அணியில் ரஜத் பட்டிதார் ஏன் இடம் பிடிக்கவில்லை? என்பது குறித்த விளக்கம் எனக்கு தெரியவில்லை.

ஏனெனில் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆர்.சி.பி அணியை வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அதுமட்டும் இன்றி ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் சரி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் கிட்டதட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி திமிர் பிடித்தவர், அடங்காதவர் தான்.. ஆனா அவரோட இந்த குணம் எனக்கு பிடிக்கும் – ரவி சாஸ்திரி

இப்படி அற்புதமான செயல்பாட்டை அவர் பேட்டிங்கில் வெளிப்படுத்தியும் அவரை அணியில் தேர்வு செய்யாதது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் அவர் இன்னும் என்ன செய்தால் தான் இந்திய டி20 அணியில் இடம் கொடுப்பீர்கள்? என்ற கேள்வியையும் ஆகாஷ் சோப்ரா முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement