இந்திய கிரிக்கெட் அணியின் இளம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக நடைபெற்ற விஜய் ஹசாரே தொடருக்காக ஹைதராபாத் அணியில் இணைந்து விளையாடி இருந்தார். அப்போது அடிவயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை முற்றிலுமாக தவறவிட்டார். அந்த அளவுக்கு அவரது காயம் தீவிரமாக இருந்தது.
நான் இவ்வளவு சீக்கிரம் திரும்பிவர இவங்கதான் காரணம் : திலக் வர்மா
அதனை தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவர் பயிற்சி மற்றும் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டு வந்தார். இதனால் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக சரியான நேரத்தில் அவரால் இந்திய அணியுடன் இணைய முடியுமா? என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால் தனது காயத்திலிருந்து மிகச் சிறப்பாக மீண்டு வந்த அவர் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாகவே இந்திய அணியில் இணைந்துள்ளார். அந்த வகையில் இந்திய அணியுடன் இணைந்தது மட்டுமின்றி நேற்று நாவி மும்பையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் பங்கேற்று விளையாடியிருந்தார்.
காயத்திற்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளதால் அவர் எப்படி ஆடப்போகிறார்? என்று எதிர்பார்த்த வேளையில் நேற்றைய போட்டியில் 19 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 45 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் தனது காயத்தில் இருந்து மீண்டு வந்தது குறித்து பேசிய திலக் வர்மா கூறுகையில் : எனக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து இவ்வளவு சீக்கிரமாக வெளி வருவேன் என்று நினைக்கவில்லை.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி பங்கேற்குமா? – கேப்டன் சூரியகுமார் யாதவ் பதில்
அதற்கு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தான் நான் நன்றி சொல்லியாக வேண்டும். அந்த அளவிற்கு அவர்கள் என்னை விரைவாக தேற்றி களத்திற்கு மீண்டும் கொண்டு வந்துள்ளனர். உண்மையிலேயே தேசிய கிரிக்கெட் வாரியத்திற்கும், பிசிசிஐ-க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலக கோப்பை தொடரில் விளையாடப் போவது என்னுடைய மிகப்பெரிய கனவு என திலக் வர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.



