பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி பங்கேற்குமா? – கேப்டன் சூரியகுமார் யாதவ் பதில்

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை 2026 ஆம் ஆண்டிற்கான ஐசிசி பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா பங்கேற்குமா? : சூரியகுமார் யாதவ் பதில்

இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்க இருக்கும் இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக பங்கேற்கும் வேளையில் இந்த தொடரின் மிகப்பெரிய போட்டியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியே பார்க்கப்படுகிறது. எதிர்வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கொழும்புவில் நடைபெறும் என அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.

- Advertisement -

ஆனால் இந்திய அணியுடன் நடைபெறயிருக்கும் போட்டியில் தங்கள் பங்கேற்க போவதில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரானது துவங்க சில நாட்களே உள்ள நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி குறித்த கேள்விக்கு சில கருத்துக்களை வெளிப்படையாக அளித்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : பாகிஸ்தான் நிர்வாகம் எடுத்த முடிவு என் கைகளில் இல்லை. அது அவர்களது இஷ்டம். அவர்களுக்கு எதிரான போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டு விட்டது. அதனால் நாங்கள் விளையாடி தான் ஆக வேண்டும். ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். அதனால் இம்முறையும் நாங்கள் அந்த போட்டியில் விளையாட தயார். ஆனால் பாகிஸ்தான் அணி பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துவிட்டார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : சஞ்சு சாம்சனின் மாபெரும் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்த வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

எங்களது மனநிலை மிகத் தெளிவாக உள்ளது. முதலில் அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும், பின்னர் கனடா அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட இருக்கிறோம். பின்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதற்காக கொழும்பு நகருக்கு செல்ல பிளைட் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு விட்டன. அவர்கள் விளையாடவில்லை என்றாலும் நாங்கள் அங்கு செல்வோம் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement