ஐசிசி-யின் 19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது ஜிம்பாப்வே நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டியானது பிப்ரவரி நான்காம் தேதியான நேற்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சஞ்சு சாம்சனின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி :
இன்னும் சில தினங்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியிலும் இந்திய அணி பங்கேற்று விளையாட காத்திருக்கிறது. இந்த இறுதிப்போட்டியானது ரசிகர்களின் மத்தியிலும் பெரியளவு கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த அரையிறுதி போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதிலும் இந்த போட்டியில் அவர் 4 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் சஞ்சு சாம்சன் மற்றும் கௌரவ் திமான் ஆகியோரின் மாபெரும் சாதனை ஒன்றினை தகர்த்து வரலாறு படைத்துள்ளார்.
அந்த வகையில் வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய சாதனை யாதெனில் : 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணிக்காக ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரராக சஞ்சு சாம்சன் மற்றும் கௌரவ் திமான் ஆகியோர் 12 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்த வேளையில் நேற்றைய போட்டியில் அந்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தகர்த்துள்ளார்.
இதையும் படிங்க : அவரை டி20 அணிக்குள் கொண்டு வந்ததுக்கு பாராட்டியே ஆகனும்.. கண்டிப்பா அசத்துவார் – மைக்கல் கிளார்க் கருத்து
நேற்றைய போட்டியில் 4 சிக்ஸர்களை அடித்ததோடு சேர்த்து இந்த உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி 15 சிக்ஸர்களை விளாசி ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சிக்சர்களை அடித்த இளம் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் இறுதிப்போட்டியிலும் அவர் இன்னும் சில சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் இந்த பட்டியலில் அவர் முதல் இடத்தில் நீடிக்கவும் அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



