
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி களமிறங்கியது.
அப்படி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவிக்க பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 184 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கான வாய்ப்பையும் உயிர்ப்புடன் வைத்துள்ளது.
இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மா ஆறாவது வீரராக களமிறங்கி 16 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணியை பொருத்தவரை மூன்றாம் இடத்தில் இறங்கி விளையாடி வந்த திலக் வர்மா பொறுமையான விளையாடி வந்ததால் அவரது பேட்டிங் ஆர்டர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பின் வரிசையில் தான் சிறப்பாக விளையாடியது குறித்தும் பேட்டிங் ஆர்டரில் உள்ள மாற்றம் குறித்தும் பேசிய திலக் வர்மா கூறுகையில் : இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நாங்கள் கடந்த ஒரு ஆண்டாக என்ன செய்தோம்? என்பதை பற்றி நிறையவே விவாதித்தோம். எனவே இந்த போட்டியில் நிச்சயம் எங்களுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கருதியே அதிரடியாக விளையாடினோம்.
அதே போன்று இந்திய அணி எனக்கு என்ன ரோலை வழங்குகிறதோ அதனை செய்ய நான் தயாராக காத்திருக்கிறேன். ஏனெனில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பின்வரிசையில் தான் விளையாடி வருகிறேன். இந்திய அணியை பொறுத்தவரையும் இதேபோன்று ஒரு சில போட்டிகளில் ஆடியுள்ளேன்.
இதையும் படிங்க : இதுமட்டும் போதும் வேற என்ன வேணும்? சஞ்சு சாம்சனை பாராட்டிய – ரவிச்சந்திரன் அஷ்வின்
எனவே பின் வரிசையில் களமிறங்குவது பற்றி எனக்கு கவலை கிடையாது. என்னை பொறுத்தவரை இந்திய அணியின் ரன் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். அந்த வகையில்தான் இந்த போட்டியில் எந்த பந்து வந்தாலும் பவுண்டரிக்கு விரண்ட வேண்டும் என்று விளையாடியதாக திலக் வர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.