இதுமட்டும் போதும் வேற என்ன வேணும்? சஞ்சு சாம்சனை பாராட்டிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin and Samson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் டி20 போட்டிகளில் முதன்மை துவக்க வீரராக செயல்பட்டு வந்த வேளையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது பார்ம் அவுட்டானதன் காரணமாக நடைபெற்று வரும் 2026 டி20 உலககோப்பை தொடரில் இடம் பெறாமல் இருந்து வந்தார். ஆனாலும் அவ்வப்போது அவருக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைத்து வந்தன. அந்த வகையில் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.

சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசிய : ரவிச்சந்திரன் அஷ்வின்

அந்த வாய்ப்பில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட அவர் 15 பந்துகளில் 24 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தார். அவர் கொடுத்த துவக்கமே இந்திய அணி 256 ரன்கள் வரை செல்ல உதவியது. இதன் காரணமாக தொடர்ந்து அவர் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் சஞ்சு சாம்சனை தொடர்ந்து விளையாட வைக்குமாறு தனது வேண்டுகோளை முன் வைத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சஞ்சு சாம்சன் எப்பேர்பட்ட திறமையான வீரர் என்பது நமக்கு தெரியும். இந்திய அணிக்கு தற்போது அவரின் சேவை மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் உலகக் கோப்பை போன்ற போட்டிகளில் 15 பந்துகளில் 28 ரன்கள், 16 பந்துகளின் 30 ரன்கள் என்கிற துவக்கத்தை கொடுக்கும் போது அது அணிக்கு போதும் என்று நினைக்கிறேன். ஏனெனில் துவக்க வீரராக அவர் ஒரு அதிரடியான துவக்கத்தை கொடுக்கும் போது பின்னால் வரும் வீரர்கள் ரன் குவிப்பை வேகப்படுத்தலாம். எனவே அவரது பணி இதோடு போதுமானது என்று நினைக்கிறேன். ஆனாலும் அவர் பெரியளவில் ரன்களை குவிக்க வேண்டிய விருப்பமும் என்னிடம்.

- Advertisement -

இதையும் படிங்க : அபிஷேக் சர்மா இப்படி விளையாடுவதை பாக்க ஆச்சரியமா இருக்கு – சுனில் கவாஸ்கர் பாராட்டு

ஏனெனில் சஞ்சு சாம்சன் போன்ற ஒரு வீரருக்கு இவ்வளவு பெரிய மேடையில் இடம் கிடைக்கும் போது அவர் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பெரியளவில் ரன் குவித்தால் அவர் மிகப்பெரிய வீரராக மாறுவார். எனவே இந்த உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்று தான் விரும்புவதாக ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement