
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான திலக் வர்மா எதிர்வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலும், அதற்கடுத்து வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்குமான இந்திய அணியிலும் முதன்மை டாப் ஆர்டர் வீரராக இடம்பெற்றிருந்தார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இம்மாதம் துவங்க இருக்கும் வேளையில் அதற்கு முன்னதாக தற்போது திலக் வர்மா ஒரு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக அவர் எதிர்வரும் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து வெளியேறும் அளவிற்கு அவருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடருக்கான ஹைதராபாத் அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.
அப்படி விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் திலக் வர்மா நேற்று ஜனவரி 7ஆம் தேதி நடைபெற்ற போட்டியின் போது விளையாடிய பின்னர் அவருக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் உடல் உபாதை ஆகியவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ராஜ்கோட்டில் உள்ள கோகுல் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு விரைப்பையில் ரத்த ஓட்டம் தடைபடும் டெஸ்டிகுலார் டார்சன் என்கிற பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதோடு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இந்த காயத்திலிருந்து குணமடைய நான்கு வாரங்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.
அடுத்த மாதம் பிப்ரவரி 7-ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடரானது நடைபெறவிருக்கும் வேளையில் அதற்கு முன்னதாக அவரால் மீண்டும் முழு உடற்தகுதியை எட்டுவது கடினம். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய அவர் டி20 உலக கோப்பை தொடருக்கான ஆரம்பகட்ட போட்டிகளையும் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்காதது குறித்து மவுனம் கலைத்த தேவ்தத் படிக்கல் – விவரம் இதோ
இதன் காரணமாக எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் டி20 தொடரில் திலக் வர்மாவுக்கு பதிலாக மாற்று வீரர் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டதுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி செய்தி வெளியானதுக்கு பிறகு திலக் வர்மாவுக்கு பதிலாக இடம்பெறப்போகும் வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.