- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நியூஸி டி20 தொடரில் காயத்தால் விலகிய திலக்.. 2026 உ.கோ விளையாடுவாரா? அவரே கொடுத்த தகவல்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் பிப்ரவரி 7ஆம் தேதி ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க உள்ளது. அந்தத் தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில் அந்தத் தொடருக்கான இந்திய அணியிலிருந்து முதல் 3 போட்டிகளில் திலக் வர்மா காயத்தால் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 2025/26 விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் தொடரில் அவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். அந்த சூழ்நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டதாக தெரிகிறது.

- Advertisement -

விலகிய திலக்:

அதனால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு வயிற்றுப் பகுதியில் ஏதோ பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக மருத்துவமனையில் அவருக்கு உடனடியாக சிகிச்சையும் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் அந்த அறுவை சிகிச்சையிலிருந்து அவர் முழுமையாக குணமடைவதற்கு சுமார் ஒரு மாத காலம் தேவைப்படும் என்று செய்திகள் தெரிவித்தன.

அதனால் 2026 டி20 உலகக் கோப்பையில் அவரால் விளையாட முடியுமா என்பது கேள்விக்குறியானது இந்திய ரசிகர்களை சோகமடைய வைத்தது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 போட்டிகளில் திலக் வர்மா விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உடல் நலம் குணமாவதைப் பொறுத்து எஞ்சிய 2 போட்டிகளில் திலக் விளையாடுவதைப் பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

2026 டி20 உ.கோ விளையாடுவாரா:

இதனால் 2026 டி20 உலகக் கோப்பையிலும் அவர் விளையாடுவாரா? என்பது சந்தேகமாக மாறியுள்ளது. ஒருவேளை அவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடாமல் வெளியேறினால் அது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக அமையலாம். ஏனெனில் ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் 3வது பேட்ஸ்மேனாக அசத்தி வரும் திலக் வர்மா 2025 ஆசியக் கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை அபாரமாக விளையாடி வெற்றி பெற வைத்ததை மறக்க முடியாது.

இதையும் படிங்க: 95 இன்னிங்ஸில் 5000.. மைக்கேல் பெவன், பாபர், கோலியை முந்திய ருதுராஜ்.. 2 புதிய வரலாற்று சாதனை

இன்னிக்கு உங்களுக்கு தெரிந்ததை விட நான் விரைவாக குணமடைந்து வருவேன் என்று திலக் வர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர். “அதிகப்படியான அன்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள். ஏற்கனவே குணமடையும் பயணத்தில் இருக்கும் நான் உங்களுக்குத் தெரிந்ததை விட களத்திற்கு விளையாட வேகமாக வருவேன்” என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதிலிருந்து 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட வந்து விடுவேன் என்று திலக் மறைமுகமாக தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.0

- Advertisement -