பாகிஸ்தான் அடிக்க வருவாங்கன்னு தெரியும்.. அதான் விராட் பாய் மாதிரி ரெடியா இருந்தேன்.. திலக் பேட்டி

Tilak varma
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அத்துடன் பாகிஸ்தானை 3வது முறையாக வீழ்த்திய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதையும் நிரூபித்தது. முன்னதாக துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 147 ரன்களை துரத்திய இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதை சேசிங் செய்த இந்தியா அணிக்கு அபிஷேக் சர்மா, சுப்மன் கில் கேப்டன் சூரியகுமார் ஆரம்பத்திலேயே அவுட்டானார்கள். அதனால் 20/3 என ஆரம்பத்திலேயே இந்தியா தடுமாறியதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். அப்போது நங்கூரமாக விளையாடிய திலக் வர்மா சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே ஆகியோருடன் சேர்ந்து 69* ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

இந்தியா தான் பெருசு:

அவருடைய ஆட்டத்தைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் கிட்டத்தட்ட 2022 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி பாகிஸ்தானை தோற்கடித்தது போல திலக் வர்மாவும் அசத்தியதாக பாராட்டினர். இந்நிலையில் லீக் மற்றும் சூப்பர் 4 போட்டிகளில் தோற்றதால் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடிக்க பாகிஸ்தான் வரும் என்று தெரியுமென திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

அப்போது நம்முடைய நாட்டுக்காக உயிரையும் கொடுத்தாவது வெல்ல வேண்டும் என்று நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதற்காக விராட் கோலி போல இந்தியாவை வெற்றி பெற வைத்ததாக தம்மை பாராட்டுவதற்காக பெருமையடைவதாக தெரிவிக்கும் திலக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சூர்யா பாய் சொன்னது போல பாகிஸ்தான் பெரிய போட்டியாக இல்லை. ஆனால் பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் எங்களைத் தோற்கடிக்க தயாராகி வருவார்கள் என்பது எங்களுக்கு தெரியும்”

- Advertisement -

விராட் கோலி போல:

“குறிப்பாக அவர்கள் பந்தில் வேகத்தை குறைத்து பந்து வீசுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். பிட்ச்சும் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இல்லை. அப்போது நாங்கள் சில நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியை வென்றதற்காக பெருமையடைகிறோம். அப்போட்டியில் அழுத்தம் நிலவிய போது எனது மனதில் நிறைய ஓடியது. ஆனால் நாட்டை விட எதுவும் பெரியது கிடையாது”

இதையும் படிங்க: ஆசியக் கோப்பை இந்திய நாயகன் அபிஷேக்.. தரவரிசையில் உலக சாதனை.. இங்கிலாந்து வீரரை முந்தி வரலாறு

“எனவே என்னுடைய அனைத்தையும் நாட்டுக்காக கொடுக்க உறுதியுடன் இருந்த நான் அமைதியுடன் இருக்க முயற்சித்தேன். எனது நாட்டுக்காக என் வாழ்க்கையை கொடுப்பேன். அழுத்தம் இருந்தாலும் நாட்டை நினைத்துக் கொண்டு ஒரு சமயத்தில் ஒரு பந்தில் மட்டும் கவனம் செலுத்தினேன். அப்படி விளையாடி வெற்றி பெற வைத்ததில் பெருமையடைகிறேன். விராட் பாய் போன்ற ஜாம்பவானுடன் பேசுவது பெருமையான விஷயம். ஆனால் எனது கவனம் என்னுடைய நாட்டை வெற்றி பெற வைப்பதில் மட்டுமே இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement