தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நவம்பர் 15ஆம் தேதி ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 283-1 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் சதமடித்து 109*, திலக் வர்மா 120* ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே சுமாராக பேட்டிங் செய்து 18.2 ஓவரில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 43 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3, அக்சர் படேல் 2, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
இந்தியா வெற்றி:
அதனால் 3 – 1 (4) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்தது. இந்த வெற்றிக்கு அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த இளம் வீரர் திலக் வர்மா ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் தட்டிச் சென்றார். இந்நிலையில் கடந்த வருடம் டக் அவுட்டான அதே ஜோஹன்ஸ்பர்க் மைதானத்தில் தற்போது சதமடித்துள்ளது மகிழ்ச்சியை கொடுப்பதாக திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் உங்களுக்கு ஒரு வேடிக்கையான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். கடந்த வருடம் இங்கே நான் விளையாடிய போது முதல் பந்திலேயே அவுட்டானேன். இந்த இன்னிங்ஸ் எனக்கும் எங்களுடைய அணி தொடரை வெல்வதற்கு முக்கியமாக அமைந்தது. கடந்த போட்டி போலவே இந்த போட்டியிலும் அமைதியாக இருந்து என்னுடைய வடிவத்துடன் அடிப்படைகளை பின்பற்றியதே திட்டமாக இருந்தது”
ஆட்டநாயகன் திலக்:
“இது நம்ப முடியாத உணவு. தென்னாப்பிரிக்காவில் சவாலான சூழ்நிலைகளில் அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு சதங்கள் அடிப்பேன் என்று நினைத்து பார்க்கவில்லை. இதற்காக என்னுடைய கேப்டன் சூரியகுமாருக்கு நன்றி. கடந்த போட்டியில் சொன்னது போலவே சமீபத்திய போட்டிகளில் நான் லேசான காயத்தை சந்தித்தேன்”
இதையும் படிங்க: 135 ரன்ஸ்.. 2024 டி20 உ.கோ போல அசத்தல்.. தெ.ஆ அணிக்கு எதிராக இந்தியா இரட்டை உலக சாதனை
“நான் கடவுளை நம்பினேன். என்னுடைய செயல்முறைகளையும் நம்பினேன். அதனாலேயே கடவுளுக்கு நன்றி சொல்லும் வகையில் மேலே பார்த்து அப்படி சதத்தை கொண்டாடினேன்” என்று கூறினார். அந்த வகையில் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்கள் தலைமையில் சவாலான தென்னாப்பிரிக்காவில் வென்றுள்ள இந்தியா தங்களை உலக சாம்பியன் என்பதையும் நிரூபித்துள்ளது.



