135 ரன்ஸ்.. 2024 டி20 உ.கோ போல அசத்தல்.. தெ.ஆ அணிக்கு எதிராக இந்தியா இரட்டை உலக சாதனை

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. இருப்பினும் 3வது போட்டியில் இந்தியா வென்ற நிலையில் நான்காவது போட்டி நவம்பர் 15ஆம் தேதி ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவரில் 283-1 ரன்கள் குவித்து தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது. இந்தியாவுக்கு அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 36 ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

ஆனால் மறுபுறம் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 6 பவுண்டரி 9 சிக்ஸருடன் சதமடித்து 109* (56) ரன்கள் விளாசினார். அவருடன் சேர்ந்து இன்னும் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 9 பவுண்டரி 10 சிக்ஸருடன் சதமடித்து 120* (47) ரன்கள் விளாசி அசத்தினர். பின்னர் 284 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முயற்சித்து 18.2 ஓவரில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 43, டேவிட் மில்லர் 36 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 2, அக்சர் பட்டேல் 2, அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதனால் 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3 – 1 (4) என்ற கணக்கில் இத்தொடரை வென்றது. குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனல் போல இம்முறை தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணிலேயே தோற்கடித்து இந்தியா கோப்பையை வென்றது.

- Advertisement -

உலக சாதனை வெற்றி:

இதன் மூலம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் (135) வித்தியாசத்தில் வென்ற அணி என்று ஆஸ்திரேலியாவின் சாதனையை உடைத்த இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் டர்பன் நகரில் 2023ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனை. அத்துடன் இந்த வெற்றியும் சேர்த்து தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்தியா 31 போட்டிகளில் 18 வெற்றிகள் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ராகுல் வேண்டாம்.. முதல் ஆஸி போட்டியில் ரோஹித்துக்கு பதில் அவரை ஓப்பனிங் இறக்குங்க.. சாஸ்திரி அட்வைஸ்

அதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 25 போட்டிகளில் 17 வெற்றிகள் பெற்றது முந்தைய சாதனை. அந்த வகையில் சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து இத்தொடரில் வெற்றி பெற்று இந்திய அணி ரசிகர்களுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

Advertisement