IND vs WI : மீண்டும் போராடி இந்தியாவை காப்பாற்றிய திலக் வர்மா – சூரியகுமாரையே மிஞ்சி சாதனையுடன் கேரியரை அபார துவக்கம்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே 1 – 0* என்ற கணக்கில் பின்னடைவுக்குள்ளானது. குறிப்பாக ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டும் 150 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்த நிலைமையில் இத்தொடரின் முக்கியமான 2வது போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் துவங்கியது.

அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த இந்திய அணிக்கு காயமடைந்த குல்தீப் யாதவுக்கு பதிலாக ரவி பிஷ்னோய் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே தடுமாறிய சுப்மன் கில் 7 (9) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் சரவெடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவசரப்பட்டு 1 (3) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

போராட்ட ஸ்கோர்:
அதனால் 18/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட முயற்சித்த இசாம் கிசான் 2 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 27 (23) ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை பெற்றார். ஆனாலும் மிடில் ஓவரில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த அவரை போலவே அடுத்த ஓவரில் எதிர்ப்புறம் தடுமாறிக் கொண்டிருந்த சஞ்சு சாம்சனும் 7 (7) ரன்னில் ஸ்டம்பிங்காகி சென்றார். அந்த நிலைமையில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா கடந்த போட்டியை போலவே அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்யப் போராடினார்.

குறிப்பாக கடந்த போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து வெற்றிக்கு போராடிய அவர் இந்த போட்டியில் நிதானமாக செயல்பட்டு 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்து 51 (41) ரன்கள் எடுத்து இந்தியாவையும் ஓரளவுக்கு காப்பாற்றி ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்துக் கொண்டிருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 2 சிக்ஸருடன் 24 (18) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

இறுதியில் அக்சர் பட்டேல் 14 (12) ரன்களும் ரவி பிஷ்னோய் 1 சிக்சருடன் 8* (4) ரன்களும் அர்ஷிதீப் சிங் 1 பவுண்டரியுடன் 6* (3) ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய இந்தியா 20 ஓவர்களில் 152/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் சிறப்பாகவே செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் ரோமாரியா செஃபார்ட் மற்றும் அகில் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

இருப்பினும் முந்தைய போட்டியில் இதை விட குறைவான ரன்களை 2வது இன்னிங்ஸில் சேசிங் செய்வதற்கு தடுமாறிய இந்தியா இம்முறை அதை விட அதிக ரன்கள் எடுத்துள்ளதால் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போராட முயற்சித்து வருகிறது. முன்னதாக கடந்த போட்டியில் இதே போல சவாலான பிட்ச்சில் சூர்யகுமார் போன்ற அனுபமிக்க வீரர்கள் தடுமாறிய நிலையில் அறிமுகமாக களமிறங்கி 39 ரன்களை அதிரடியாக எடுத்த திலக் வர்மா இந்த போட்டியில் எடுத்த 51 ரன்களையும் சேர்த்து தன்னுடைய முதல் 2 இன்னிங்ஸில் மொத்தமாக 90 ரன்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் – புதிய வீரர் யார்னு பாருங்க

இதன் வாயிலாக உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் சூரியகுமார் யாதவையே மிஞ்சியுள்ள திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய முதல் 2 இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்று தம்முடைய கேரியரை அட்டகாசமாக துவங்கியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியை வைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. திலக் வர்மா : 90*
2. சூரியகுமாரி யாதவ் : 89
3. மந்திப் சிங் : 83
4. தீபக் ஹூடா : 68
5. அஜிங்க்ய ரஹானே : 61

Advertisement