IND vs WI : 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் – புதிய வீரர் யார்னு பாருங்க

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. குறிப்பாக 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை 149 ரன்கள் கட்டுப்படுத்தியும் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் இன்னும் வீழ்ந்து விடவில்லை என்பதை நிரூபித்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெற்றது. இருப்பினும் ஒரு தோல்விக்காக பின்வாங்காத இந்தியா ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் துவங்கிய 2வது போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியது. அதில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

அணியில் நிகழ்ந்த மாற்றம்:
மேலும் இந்த போட்டிக்கான மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 3 ஸ்பின்னர்களுடன் இந்தியா களமிறங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் கடந்த போட்டியில் விளையாடிய நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வலைப்பயிற்சியின் போது காயத்தை சந்தித்ததால் அவருக்கு பதிலாக மற்றொரு இளம் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் சேர்க்கப்படுவதாக இந்திய அணி நிர்வாகம் அறிவித்தது.

குறிப்பாக ஏற்கனவே சந்தித்தது காயங்களிலிருந்து முழுமையாக குணமடைந்து சமீபத்திய தொடர்களில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்து வந்த குல்தீப் யாதவ் ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய நிலையில் மீண்டும் காயத்தை சந்தித்து வெளியேறயுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே சமயம் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தி நல்ல ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் ரவி பிஷ்னோய் அந்த இடத்தில் விளையாடுவது மிகச் சிறந்த தேர்வாகவே அமைந்துள்ளது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா களமிறங்கியுள்ள 2வது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவன் இதோ:
ஹர்டிக் பாண்டியா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிசான், சூரியகுமார் யாதவ் (துணை கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் பட்டேல், ரவி பிஸ்னோய், யுஸ்வேந்திர சஹால், அர்ஷிதீப் சிங், முகேஷ் குமார்.

அத்துடன் இதிலிருந்து முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் அதற்காக பதறாமல் பெரிய அளவில் அதிரடியான மாற்றங்களை செய்ய விரும்பாத இந்தியா வெற்றிக்காக தன்னம்பிக்கையுடன் போராட களமிறங்கியுள்ளது தெரிய வருகிறது. குறிப்பாக சோதனை என்ற பெயரில் இந்த சுற்றுப்பயணத்தில் நிறைய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளதால் ஏராளமான விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஒரு வழியாக இந்த போட்டியில் ராகுல் டிராவிட்டும் பெரிய அளவில் மாற்றத்தை செய்யவில்லை என்பதும் தெரிய வருகிறது.

இதையும் படிங்க:IND vs WI : 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் – புதிய வீரர் யார்னு பாருங்க

மேலும் இப்போட்டி நடைபெறும் ப்ரோவிடன்ஸ் மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வருவதால் முதலில் பேட்டிங் செய்யும் இந்தியா குறைந்தது 150க்கும் மேற்பட்ட ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement