IND vs WI : முதல் போட்டியில் இந்திய அணி தோக்க காரணமே இதுதான் – 2 ஆவது போட்டியிலாவது அந்த தப்பை திருத்துமா?

Axar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் பின் தங்கியுள்ளது. அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெறவுள்ளது.

- Advertisement -

முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி எளிதில் சேசிங் செய்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டியின் ஆரம்பத்திலிருந்து சீரான இடைவெளியில் இந்திய அணியின் வீரர்கள் ஆட்டமிழந்து வந்ததால் இந்திய அணி சறுக்கலை சந்தித்தது.

குறிப்பாக பாண்டியா, சாம்சன் ஆட்டமிழந்ததும் அக்சர் பட்டேலை மட்டுமே இந்திய அணி நம்பியிருந்தது. ஆனால் அவர் இறுதியில் ஆட்டமிழக்கவே தோல்வி உறுதியானது என்றே கூறலாம். ஏனெனில் இந்திய அணியில் முதல் ஏழு வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தாலும் அதன்பிறகு இருக்கும் குல்தீப் யாதவ், சாஹல், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் என நால்வருமே நம்பர் 11 பேட்டர்கள் தான்.

- Advertisement -

எனவே இந்த விடயம் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டுமெனில் : சேசிங்கின் போது கடைசிவரை செல்லாமல் போட்டியை முன்கூட்டியே முடிக்க வேண்டும். அதாவது ஐந்து, ஆறு விக்கெட்டுகள் இழந்தாலும் வெற்றி பெறுவது போன்ற நிலையில் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரில் கேப்டன் கூல் தல தோனியை விட அதிக சம்பளம் வாங்கும் 3 சிஎஸ்கே வீரர்கள் – லிஸ்ட் இதோ

அல்லது பேட்டிங் டெப்த் இல்லாத இந்த சூழ்நிலையில் முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவிக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே இந்திய அணி இன்று வெற்றிபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement