சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பலரும் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட திலக் வர்மா :
அதோடு தனிப்பட்ட முறையில் வீரர்களுக்கும் இந்த வெற்றி தனிப்பட்ட முறையில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தென்னாப்பிரிக்க தொடரின் ஐந்தாவது போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர இளம் ஆட்டக்காரரான திலக் வர்மா 42 பந்துகளை சந்தித்து 73 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதன் மூலம் இந்திய அணி அந்த போட்டிகள் மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க அவரது ஆட்டம் காரணமாக அமைந்தது. டி20 போட்டிகளை பொறுத்த வரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் திலக் வர்மா தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருவதால் எதிர்வரும் 2026 உலக கோப்பை அணியில் முக்கிய வீரராகவும் அவர் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க தொடர் முடிந்த கையோடு வெளியாகியுள்ள டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்த தொடரில் பேட்டிங்கில் அசத்திய அவருக்கு தரவரிசையில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே டி20 போட்டிகளின் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த இலங்கை வீரர் பதும் நிஷாங்காவை பின்னுக்கு தள்ளியுள்ள அவர் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் மட்டும் அவர் 62 ரன்கள் சராசரியுடன், 131 ஸ்ட்ரைக் ரேட் உடனும் 187 ரன்கள் குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய டி20 அணியில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக என்ன காரணம்? – அமித் மிஸ்ரா கருத்து
எதிர்வரும் 2026 டி20 உலககோப்பை தொடரில் திலக் வர்மா தான் 3 ஆம் இடத்தில் விளையாடுவார் என்று கேப்டன் சூரியகுமார் யாதவ் உறுதி செய்துள்ள வேளையில் திலக் வர்மா நல்ல பார்மில் விளையாடி வருவது இந்திய அணிக்கும் கூடுதல் பலத்தை சேர்க்கும் விதமாக மாறியுள்ளது.



