இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை தவிர்க்க முடியாத வீரராக விளையாடி வரும் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவது மிகவும் குறைவாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு டெஸ்ட் போட்டிகளை தவிர மற்ற வடிவ போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை.
டி20 போட்டிகளில் பண்ட் இடம்பெறாமல் போக என்ன காரணம்? : அமித் மிஸ்ரா
அப்படி ஒருவேளை வாய்ப்பு கிடைத்தாலும் பேக் அப் வீரராக மட்டுமே இந்திய அணியில் இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கூட சஞ்சு சாம்சனுக்கு பேக் அப் வீரராக இஷான் கிஷனே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிரடி வீரரான ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.
இப்படி அதிரடி வீரராக பார்க்கப்படும் அவருக்கு டி20 போட்டிகளில் இடம் கிடைக்காமல் போக என்ன காரணம்? என்பது குறித்து சில தகவல்களை முன்னாள் இந்திய வீரரான அமித் மிஸ்ரா பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
ரிஷப் பண்ட் மீது அதிகப்படியான எதிர்பார்ப்புகள் உள்ளன. எனவே அவர் ஆட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அவரது பாணியை மாற்றினால் மட்டுமே அவரால் மீண்டும் டி20 அணிக்குள் வர முடியும். என்னை பொறுத்தவரை தற்போது அவரை இளம் வீரர் என்று சொல்ல முடியாது. ஏனெனில் 2018 ஆம் ஆண்டு முதல் அவர் இந்திய அணியில் இருக்கிறார்.
எனவே அவர் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பேட்டிங் செய்ய வந்ததுமே எல்லா பந்துகளையும் அடிக்க நினைத்து ஆட்டமிழந்து வெளியேறினால் அவரை எப்படி டி20 அணிக்குள் கொண்டு வருவார்கள். இந்திய அணியை பொறுத்தவரை தற்போது தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் தான் தேவை.
இதையும் படிங்க : எங்க மேலயா சந்தேகம்? அடுத்தடுத்து அசத்திய ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி – விவரம் இதோ
அதனால் தான் அடித்து விளையாடும் ரிஷப் பண்டை தாண்டி மற்ற விக்கெட் கீப்பர்களுக்கு நிர்வாகம் செல்கிறது. ரிஷப் பண்ட் இதையெல்லாம் புரிந்துகொண்டு தனது அதிரடியான பாணியை மாற்றி சூழலுக்கு ஏற்ப விளையாடினால் மட்டுமே அவரால் மீண்டும் டி20 அணியில் இடம் பிடிக்க முடியும் என அமித் மிஸ்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



