ரொம்ப நம்பாதீங்க, 2023 உ.கோ – ஆசிய கோப்பையில் திலக் வர்மா சொதப்ப வாய்ப்பிருக்கு – வாயை விட்ட முன்னாள் பாக் வீரர்

Tilak-Varma
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை நிர்ணயிக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. இருப்பினும் இத்தொடர் துவங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடையாமல் இருப்பது இந்தியாவுக்கு பின்னடைவாக இருந்து வருகிறது.

KL rahul Shreyas Iyer

- Advertisement -

அதை விட நம்பர் 4வது இடத்தில் விளையாடப் போகும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலான மாற்று வீரர் இல்லாததும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாததும் ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக 2011 உலகக்கோப்பை வெற்றியில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடதுகை பேட்ஸ்மேன்கள் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோகித் சர்மா முதல் ஹர்திக் பாண்டியா வரை டாப் 6 பேட்ஸ்மேன்களும் வலது கை வீரர்களாக இருக்கின்றனர்.

ரொம்ப நம்பாதீங்க:
அந்த சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகமாகி சவாலான மைதானங்களில் இதர வீரர்கள் தடுமாறிய போது மிகச்சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போராடிய திலக் வர்மாவை தேர்வு செய்தால் ஒரே கல்லில் 2 மாங்காய் போல இந்த 2 பிரச்சனைகளையும் தீர்த்து விடலாம் என ரவிச்சந்திரன் அஸ்வின், பிரக்யான் ஓஜா போன்றவர்கள் தெரிவித்தனர். மேலும் 20 வயதிலேயே நல்ல முதிர்ச்சியுடன் ஐபிஎல் மற்றும் சர்வதேச அளவில் அசத்திய அவரை உலக கோப்பையில் தேர்வு செய்யலாம் என எம்எஸ்கே பிரசாத் முதல் சௌரவ் கங்குலி வரை நிறைய முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Tilak-Varma-1

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் இன்னும் அறிமுகமாகமலேயே இருக்கும் திலக் வர்மாவை அவசரப்பட்டு தேர்வு செய்தால் ஆசிய மற்றும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தடுமாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார். அதாவது பாட்டம் ஹேண்ட் பிளேயராக இருக்கும் திலக் வர்மா டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்பட்டாலும் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் தரமான பவுலிங்கை கொண்ட அணிகளுக்கு எதிராக தடுமாற வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

அதிலும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற சுமாரான பவுலிங்கை கொண்ட அணிக்கு எதிராக ஒரு தொடரில் அசத்தி விட்டார் என்பதற்காக இந்தியா அவசரப்பட்டு தேர்வு செய்து விடக்கூடாது என தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “திலக் வர்மா ஆசிய கோப்பையில் எப்படி விளையாடப் போகிறார் என்பதை பார்க்க ஆவல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இதர அணிகளுக்கு இடையேயான பந்து வீச்சிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது”

Basit Ali

“அத்துடன் பேட்டை இறுக்கமாக பிடிப்பதற்கு பாட்டம் ஹேண்டை அவர் பயன்படுத்தும் விதம் கேட்ச் கொடுத்து அவுட்டாக அதிக வாய்ப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மேலும் அவர் பெரும்பாலும் டாப் ஆர்டரில் நம்பர் 3வது இடத்தில் விளையாடி வருகிறார். மறுபுறம் இந்திய அணியில் உலக கோப்பையில் 3வது இடத்தில் விளையாட விராட் கோலி இருக்கிறார். ஒருவேளை இவருக்காக விராட் கோலி 4வது இடத்தில் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs IRE : அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச – பிளேயிங் லெவன் இதுதான்

இருப்பினும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 25 போட்டிகளில் 1236 ரன்கள் 56.18 என்ற சிறப்பான சராசரியில் எடுத்துள்ள திலக் வர்மா ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவன் நிச்சயமாக பெரிய தொடர்களில் அசத்தும் திறமை கொண்டவர் என எம்எஸ்கே பாராட்டியிருந்தார். அப்படி முன்னாள் இந்திய வீரர்கள் தெரிவிக்கும் ஆதரவு கருத்துக்களுக்கு குறுக்கே வாயை விடும் வகையில் இவருடைய கருத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement