100மீ சிக்ஸர் அடிச்சப்போ மனதில் விளையாடாதன்னு சொன்னாரு.. தல தோனியின் அட்வைஸ் பற்றி தேஷ்பாண்டே

Thushar Deshpandey
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச் சிறந்த கேப்டனாக பாராட்டப்படுகிறார். இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் ஐபிஎல் தொடரிலும் 5 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளில் தடுமாறிய வீரர்கள் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் அசத்தியுள்ளனர்.

குறிப்பாக மொய்ன் அலி, ஷேன் வாட்சன், சிவம் துபே ஆகியோர் ஆர்சிபி அணியை விட தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல உதவினர். அதே போல மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டே 2022 சீசனில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகி விளையாடினார். அந்த வருடம் நிறைய விக்கெட்டுகளை எடுத்து அவர் அதற்கு நிகராக ரன்களையும் வாரி வழங்கினார்.

- Advertisement -

தோனியின் ஆதரவு:

அதனால் அவரை அணியிலிருந்து நீக்குமாறு சிஎஸ்கே ரசிகர்களே விமர்சித்தனர். ஆனால் அவருக்கும் கேப்டன் தோனி தொடர்ந்து நம்பி வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்கினார். அந்த வாய்ப்பில் 2023 சீசனில் ஓரளவு நன்றாக செயல்பட்ட துஷார் தேஷ்பாண்டே 21 விக்கெட்டுகளை எடுத்து சிஎஸ்கே 5வது கோப்பையை வெல்ல தம்முடைய பங்காற்றினார்.

அதே போல கடந்த வருடமும் 17 விக்கெட்டுகள் எடுத்த அவருக்கு சமீபத்திய ஜிம்பாப்வே டி20 தொடரில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக 3.2 ஓவரில் 51 ரன்கள் கொடுத்த போது தவறு உன் மீதில்லை என்று கேப்டன் தோனி ஆதரவு கொடுத்ததாக தேஷ்பாண்டே கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

தோனியின் அட்வைஸ்:

“அப்போட்டியில் மஹி பாய் என்னிடம் வந்து நீ எந்த தவறும் செய்யவில்லை. நல்ல பந்துகளையே வீசினாய். இன்றைய நாள் உனக்கானதல்ல என்று சொன்னார். அடுத்த போட்டியிலும் அதே போல் வீசிய போது மீண்டும் தோனி அப்படியே சொன்னார். ஆனால் மற்றொரு போட்டியில் நான் நல்ல யார்க்கர் பந்துகளை வீசிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென தேவையின்றி வீசிய பவுன்சர் பந்தில் எதிரணி பேட்ஸ்மேன் 100 மீட்டர் சிக்ஸர் அடித்தார்”

இதையும் படிங்க: 127 ரன்ஸ்.. இங்கிலாந்துக்கே பஸ்பால் காட்டிய நிஷாங்கா.. 10 வருடங்கள் கழித்து இலங்கை சாதனை வெற்றி

“அப்போது தோனி என்னிடம் ஏன் பவுன்சர் போட்டீர்கள்? என்று கேட்டார். அதற்கு பேட்ஸ்மேன் யார்க்கரை எதிர்பார்ப்பார் என்பதால் பவுன்சர் போட்டதாக அவரிடம் சொன்னேன். அதற்கு கிரிக்கெட்டை மனதில் விளையாடாதீர்கள் என்று சொன்ன தோனி “யார்க்கர் யார்க்கர் தான்” அதை யாராலும் அடிக்க முடியாது எனக் கூறினார். மேலும் நிகழ்காலத்தில் இல்லாமல் முன்னோக்கி விளையாட முயற்சிக்குமாறு சொன்ன தோனி ஃபிட்னஸில் கவனம் செலுத்துமாறு சொன்னார்” என்று கூறினார்.

Advertisement