காயமடைந்த தவானுக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடிக்க இவருக்குத்தான் வாய்ப்பு அதிகம் – விவரம் இதோ

Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெங்களூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தவான் பீல்டிங் செய்யும்போது அவரது தோள்பட்டையில் காயம் அடைந்து வெளியேறினார். பின்னர் அவர் இரண்டாவது இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வரவில்லை அவருக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கினார்.

Rohith-2

- Advertisement -

இதனையடுத்து தவானுக்கு எக்ஸ்ரே செய்யப்பட்டது. அதன்படி அவர் விரைவில் குணமடைய வாய்ப்பில்லை என்றும் அவர் நியூஸிலாந்து தொடருக்கு தேர்வாக மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியது. அவர் காயம் குணமடைய இன்னும் நாட்கள் ஆகும் என்றும் தெரிய வந்துள்ளது இதனால் தற்போது தவானுக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடிக்கப் போகும் வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த வீரர்கள் தேர்வில் மூன்று வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது அவர்கள் ப்ரித்வி ஷா, கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் இந்த மூவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் ஆனால் ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை ரோகித் சர்மாவுடன் ராகுல் துவக்க வீரராக களம் இறங்குவதால் ப்ரித்வி ஷா மற்றும் கில் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைப்பதைவிட சூரியகுமார் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Shaw

ஏனெனில் அவருடைய அவரேஜ் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் ஆகியவை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் மற்றும் கீழ் வரிசையில் அடிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. எனவே அவரை மிடில் ஆர்டரில் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் மற்றபடி ப்ரித்வி ஷா அல்லது கில் ஆகியோருக்கு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாக வாய்ப்பு கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.

தவான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டியிலும் சிறப்பாக விளையாடி 74 மற்றும் 96 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாகவே தவானுக்கு இது போன்று தொடர்ந்து காயங்கள் ஏற்பட்டு வருவதும் அதனால் அவர் அணியில் இடம் பிடிக்க கஷ்டப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement