கற்பனையில் கூட நினைக்க முடியாத சாதனையை தன் வசம் வைத்திருக்கும் “Broadman”.!!

don6

கிரிக்கெட் உலகின் பிதாமகனான ப்ராட்மேனின் 110வது பிறந்தநாள் இன்று. இன்று அவருடைய ஒரு அறிய சாதனையை பற்றி பார்ப்போம். 20வருட கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 52 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற ப்ராட்மேன் 6996 ரன்களை குவித்துள்ளார். அவருடைய பேட்டிங் சராசரி 99.94 இது இன்றுவரை எவராலும் நெருங்க முடியவில்லை என்பது நாம் அறிந்ததே.

don 4

இப்போது அதிகம் கேள்விப்படாத ஒரு சாதனையை பற்றி பார்க்கலாம். அதாவது, ப்ராட்மேன் உள்ளுர் போட்டி ஒன்றில் 3ஓவர்களுக்கு 100 ரன்களை குவித்துள்ளார். கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத இந்த சாதனை ப்ராட்மேன் தன் வசம் வைத்துள்ளார். எப்படி 3ஓவரில் 100 ரன்கள் அடிக்க முடியும்? என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. அவர் எப்படி இந்த சாதனையை செய்தார் என்று பார்க்கலாமா!

நீங்கள் நினைப்பது போல ஒரு ஓவரில் 6 பந்துகள் கிடையாது. அவர் கிரிக்கெட் விளையாடிய போது ஒரு ஓவருக்கு 8 பந்துகள். முதல் ஓவர் 6,6,4,2,4,4,6,1,- 33ரன்கள், இரண்டாவது ஓவர் 6,4,4,6,6,4,6,4,- 40ரன்கள் எனவே இரண்டு ஓவர்களில் 70 ரன்களை குவித்தார். மூன்றாவது ஓவர் 1,6,6,1,1,4,4,6,- 27 ரன்கள் என மொத்தம் 100 ரன்களை விளாசினார். மூன்றாவது ஓவரின் முதல் பந்து மற்றும் ஐந்தாவது பந்தினையும் மற்றொரு வீரர் 1,1 என 2 ரன்களை சேர்த்தார்.

don5

இந்த சாதனை குறித்து ப்ராட்மேன் கூறியது: நான் இப்படி அதிரடியாக ஆடுவேன் என்று எனக்கே தெரியாது. மேலும், இதற்காக எந்தவொரு திட்டத்தினையும் நான் வகுக்கவில்லை இயல்பாக ஆடினேன். இந்த ஆட்டம் என்னை மட்டுமின்றி பார்த்த அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது என்று கூறினார்.