INDvsNZ : இந்திய அணியில் முதன்முறையாக வாய்ப்பை பெற்றுள்ள 3 இளம்வீரர்கள் – திறமைக்கு கிடைத்த பரிசு

Ipl

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12-சுற்றில் இருந்து வெளியேறிய இந்திய அணியானது அடுத்து நவம்பர் 17ஆம் தேதி துவங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே உலக கோப்பை தொடரில் இந்திய அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் காரணமாக அணியில் உள்ள சில வீரர்கள் நீக்கப்பட்டும், சீனியர் வீரர்களுக்கு ஓய்வும் அளிக்கப்பட்டுள்ளது.

indvsnz

அதேவேளையில் இந்த நியூசிலாந்து தொடரில் இளம் வீரர்களை பரிசோதிக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ இறங்கியுள்ளது. அதன்காரணமாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஐ.பி.எல் தொடரில் அசத்திய மூன்று வீரர்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் இந்திய அணியில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், படிக்கல் போன்ற பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 3 வீரர்களுக்கு தற்போது அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

player

அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் படேல் மற்றும் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று 3-வது வீரராக கொல்கத்தா அணியின் துவக்க வீரர் மற்றும் ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் மூவருக்கும் இந்த வாய்ப்பு அறிமுக வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : டீம்ல சேன்ஸ் கொடுக்குறமாதிரி கொடுத்து கழட்டி விடப்பட்ட தமிழக வீரர் – இனிமேல் சேன்ஸ் கிடைக்குறது கஷ்டம்

இந்த தொடரில் நிச்சயம் இந்திய அணியின் வீரர்கள் சுழற்சி முறையில் களமிறக்கப் படுவார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கும் டிராவிட் எப்பொழுதும் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை நினைப்பவர் என்பதனால் இந்த தொடரில் நிச்சயம் அனைவரும் ஒரு போட்டியிலாவது விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement