தோனியை போன்று ராணுவத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர் – விவரம் இதோ

Perera

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி இந்திய ராணுவத்தில் பாரா மிலிட்டரி என்ற பிரிவில் பயிற்சிகளை மேற்கொண்டு நாம் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து தற்போது இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான திசாரா பெரேரா இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ளார்.

30 வயதாகும் பெரேரா இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 161 ஒருநாள் போட்டிகள் மற்றும் 79 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவர் இலங்கை ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் அழைப்பின் படி இராணுவத்தில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இராணுவத்தில் இணைந்து மிகப் பெருமையாக கருதுவதாகவும், ராணுவத்தில் பணியாற்ற காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திசாரா பெரேராவின் இந்த முடிவிற்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கஜாபா ரெஜிமண்ட் எனும் இராணுவப் பிரிவில் பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

perera 1

நாளை மறுதினம் 5 ஆம் தேதி இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -