Jonny Bairstow : எங்களது இந்த பிரமாதமான வெற்றி இவர்கள்தான் வழிவகுத்தனர் – பேர்ஸ்டோ

நேற்று நடந்த டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து ஆட்டநாயகன் ஜானி பேர்ஸ்டோ அளித்த பெட்டியில் கூறியதாவது :

Bairstow
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 16 ஆவது போட்டி நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 43 ரன்களை அடித்தார்.

Dc vs Srh

- Advertisement -

பிறகு 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரராக பேர்ஸ்டோ 28 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். பிறகு ஆடிய மற்ற வீரர்கள் அணியை எளிதாக வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதனால் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்த பிறகு ஆட்டம் குறித்து பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ கூறுகையில் : இந்த போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்வது எங்களுக்கு சாதகமாக அமைந்தது ஏனெனில், எங்களது பந்துவீச்சாளர்கள் இந்த மைதானத்தில் பவுண்டரி அடிப்பது எவ்வளவு கடினம் என்று எதிரணிக்கு காண்பித்தனர். அதனால் நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது பவர்ப்பிலேயில் பீல்டர்கள் நிற்பதால் எளிதாக துவக்கத்திலேயே பவுண்டரிகளை அடிக்க முடிந்தது.

Iyer

துவக்கத்தில் அடித்த ரன்களே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது மகிழ்ச்சி. மேலும், இந்த மைதானம் ஐதராபாத் மைதானம் போன்று இல்லாமல் பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருந்ததால் இரண்டு அணிகளுமே ரன்களை குவிக்க சற்று சிரமப்பட்டன என்று பேர்ஸ்டோ கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

MS Dhoni : செல்பீ பிரச்சனையால் கேஸ் கொடுத்த தோனியே செல்பீ எடுத்த நபர் யார் தெரியுமா ? – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

Advertisement