நேற்று முன்தினம் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனியை நேரில் காண தோனியின் ரசிகையான வயதான பாட்டி ஒருவர் நீண்ட நேரமாக மைதானத்தில் தோனியை காண வந்துள்ளதாக கையில் பதாகை ஏந்தி நின்றார். இதனை கவனித்த தோனி அந்த பாட்டியிடம் சென்று செல்பீ எடுத்து பேசி மகிழ்ந்தார். இதோ அந்த வீடியோ :
Captain cool, @msdhoni humble ????
Heartwarming to see this gesture from the legend in Mumbai ???? @ChennaiIPL #VIVOIPL pic.twitter.com/6llHlenIzL
— IndianPremierLeague (@IPL) April 4, 2019
ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 59 ரன்களை குவித்தார்.
பிறகு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி துவக்கத்திலேயே சரிவை கண்டது. ராயுடு மற்றும் வாட்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், பின்னால் வந்த வீரர்களும் வரிசையாக நடையை கட்ட சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.



