இந்த ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி ஐயர்லாந்து சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த போட்டிகளை தொடர்ந்து இங்கிலாந்திற்கு செல்லும் இந்திய அணி 4 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரிலும் பங்கேற்கவுள்ளது. இந்த இரு தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த பட்டியலில் இளம் வீரர் சித்தார்த் கவுலும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன் ரைசஸ் அணியில் விளையாடிய சித்தார்த் கவுல் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தயும் ஈர்த்தார்.நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 21 விக்கெடுகள் வீழ்த்தியுள்ளார். தான் இந்த தொடரில் சிறப்பாக விளையாடியதற்கு காரணம் விராட் கோலியின் உந்துதல் தான் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களை பேசிய சித்தார்த் கவுல் “இந்திய அணியில் ஆடுவது எனக்கு நீண்ட நாள் கனவு, தற்போது அது நிறைவேறியுள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக முதலில் ஆண்டவனுக்கு நந்தி தெரிவித்துக்கொள்கிறேன். நானும் இந்திய விராட் கோலியும் 2008 இல் நடைபெற்ற யூ19 போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளோம்.
அவரது தலைமையில் ஆடுவது எனக்கு மிகவும் பரிட்சியமானது. இந்த 10 வருடங்களாக அவர் பெற்றுள்ள வளர்ச்சி எனக்கு மிகுந்த உத்வேகம் தருகிறது. 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் தலைமையில் விளையாடுவது எனக்கு மிகுந்த மகழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் என்னுடைய திறமையை நிரூபிக்க மிகுந்த ஆவலாய் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.