ஐபில் வரலாற்றில் இந்த விஷயம் நடப்பது இதுவே முதல் முறை – விவரம் உள்ளே

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.

ipl2018

- Advertisement -

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளன.இந்நிலையில் ஐபிஎல் விளையாடும் 8அணிகளில் 6அணிக்கு இந்திய அணியை சேர்ந்த வீரர்களே கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ஐபிஎல்-இல் கலந்து கொள்ள போகும் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தும், ஹைதராபாத் அணி கேப்டனாக டேவிட் வார்னரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவன் ஸ்மித், மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளனர். ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் பதவிகள் இருவரிடமிருந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணி இவர்கள் மீது வாழ்நாள் தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றது.

ipl

இதன் எதிரொலியாக இன்று இந்த ஐபிஎல்-இல் ராஜஸ்தான் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஸ்டீவன் ஸ்மித் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரஹானேவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.இதே போன்று ஹைதராபாத் அணியும் டேவிட் வார்னரை நீக்கிவிட்டு தவானை கேப்டனாக நியமித்துவிட்டால் இந்த ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளும் 8அணி கேப்டன்களுமே இந்திய அணியின் வீரர்களாகவே இருப்பார்கள்.

- Advertisement -

ஐபில் அணிகள் மற்றும் கேப்டன்களின் பட்டியல் :

1.சென்னை சூப்பர் கிங்ஸ் – தோணி

- Advertisement -

2.மும்பை இந்தியன்ஸ் – ரோஹித் சர்மா

3.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – விராட் கோலி

- Advertisement -

4.சன்ரைஸ்ஸ் ஹைராபாத் – ஷிகார் தவான்

5.ராஜஸ்தான் ராயல்ஸ் – அஜிங்கிய ரஹானே

6.கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ரவிச்சந்திரன் அஸ்வின்

7.டெல்லி டேர்டெவில்ஸ் – கௌதம காம்பிர்

8.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – தினேஷ் கார்த்திக்

Advertisement