மூன்றாம் நாள் ஆட்டத்தில் 11 பந்துகள் வீசப்பட்ட நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி – நடந்தது என்ன ?

Rahul-2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி ஆனது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களுடன் இருந்தது.

rahul 1

- Advertisement -

துவக்கவீரர் ராகுல் 57 ரன்கள், பண்ட் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்றைய போட்டி மழை காரணமாகவும் வெளிச்சம் இன்மை காரணமாகவும் பாதிக்கப்பட்டு ஓவர்கள் குறைவாக வீசப்பட்டு முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து இன்று துவங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் செஷனில் வெறும் 11 பந்துகளில் வீசப்பட்ட நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது.

இன்றைய போட்டியின் துவக்கத்திலும் மழை காரணமாக போட்டியில் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை வந்ததும் மைதானத்திலிருந்து வீரர்கள் ஓய்வு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பிறகு மீண்டும் தற்போது மழை நின்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.

rain 1

நேற்று 7 ரன்களுடன் களத்தில் இருந்த ரிஷப் பண்ட் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 20 பந்துகளைச் சந்தித்து 3 பவுண்டரி ஒரு சிக்சர் என 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தற்போது ராகுல் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் தற்போது வரை 53 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement