ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான உரிமையாளர்கள் இவர்கள்தான்…பிராவோ கருத்து ! – யார் தெரியுமா ?

bravo
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கவுள்ளன.
ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

mumbai

- Advertisement -

8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல்-இல் மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த ஐபிஎல்-இன் முதல் ஆட்டத்திலேயே வலுவான இரண்டு அணிகளான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளன.

இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்த ஐபிஎல்-இல் விளையாடவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது. ஐபிஎல் தொடங்க இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில் அனைத்து அணியின் வீரர்களும் தற்போது இறுதிக்கட்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

srinivasan

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சென்னை மற்றும் மும்பை அணிகளை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிராவோ ஐபிஎல்-ஐ பொறுத்தவரையில் மிகவும் பலம் வாய்ந்த வெற்றிகரமான அணிகள் என்றால் அது சென்னை அணியும், மும்பை அணியும் தான் என்று கூறியுள்ளார்.

மேலும் ரசிகர்களை கவர்வதற்காக எத்தகைய வித்தியாசமான வித்தையிலும் ஈடுபட தான் தயாராக உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடங்க இன்னும் ஒருசிலநாட்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement