இளம் இந்திய வீரர்கள் சச்சினை பின்பற்றாமல் தோனியை பின்பற்றி கெட்டுப்போறாங்க – முன்னாள் பாக் வீரர் கவலை

Sachin
Advertisement

1983இல் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில் வலுவான வெஸ்ட் இண்டீசை யாருமே எதிர்பாராத வகையில் தோற்கடித்து கபில் தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்றது இந்தியாவில் கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்து மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதை பார்த்து சச்சின் டெண்டுல்கர் உட்பட நிறைய இளம் வீரர்கள் உத்வேகமடைந்து பேட்டையும் பந்தையும் கையிலெடுத்த காரணத்தாலேயே நாளடைவில் இந்தியா உலகின் நம்பர்-1 அணியாக மாறியது. கபில் தேவ் உலகக்கோப்பையை வென்று இந்தியாவை கிரிக்கெட் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் என்றால் சச்சின் டெண்டுல்கர் தனது அபாரமான பேட்டிங்கால் கிரிக்கெட்டை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர் என்று கூறலாம்.

Sachin

16 வயது பிஞ்சு கால்களுடன் அறிமுகமாகி வாசிம் அக்ரம் போன்ற உலகத்தரமான பவுலர்களையும் எதிர்கொண்டு 24 வருடங்கள் இந்திய பேட்டிங்கை தோள் மீது சுமந்த அவர் ஏராளமான வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். குறிப்பாக 90களில் அவர் அவுட்டானால் அணைக்கப்பட்ட தொலைக்காட்சிகள் ஏராளமாக இருந்த நிலையில் அவரை ரோல் மாடலாக வைத்து 21ஆம் நூற்றாண்டில் கங்குலி தலைமையில் அறிமுகமான எம்எஸ் தோனி தனது கேப்டன்ஷிப் வாயிலாக இந்திய அணியை மேலும் வலுப்படுத்தினார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் அதுவரை ஒருசில வீரர்களை மட்டும் நம்பிக்கொண்டு தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்ய தவறிய இந்தியா தோனி வந்த பின்பு கிட்டத்தட்ட அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் மேட்ச் வின்னர்களாக உருவாகி தொடர்ச்சியாக வெற்றி பெறும் அணியாக மாறியது என்றே கூறலாம்.

- Advertisement -

உத்வேகமான தோனி:
மேலும் பேட்ஸ்மேன் மற்றும் பகுதிநேர பவுலர் 2 பரிணாமத்தை மட்டும் கொண்டவர் சச்சின் என்றால் அதிரடியான பேட்டிங், மின்னல்வேக விக்கெட் கீப்பிங், கடைசி நேரத்தில் களமிறங்கி வெற்றிகரமாக பினிஷிங் செய்யும் பினிஷர், 3 உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன், விராட் கோலி ரோகித் சர்மா போன்ற நிறைய தரமான இளம் வீரர்களை உருவாக்கி இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்த தலைவன் என்ற பன்முக பரிணாமத்தை கொண்டவர் தோனி ஆவார். அதனால் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக மதிப்பையும் மரியாதையும் பெற்றுள்ள தோனியை நிறைய இளம் வீரர்கள் தங்களது ரோல் மாடலாக வைத்து பின்பற்றுகிறார்கள்.

Dhoni

இந்நிலையில் ஒருகாலத்தில் சச்சினை போல் விளையாடி ஏராளமான ரன்களையும் சாதனைகளையும் படைக்க வேண்டும் என்று விரும்பிய இளம் இந்திய வீரர்கள் இப்போதெல்லாம் தோனியை பின்பற்றி சாதனைகளை உடைக்க வேண்டும் என்று நினைக்காமல் சாதாரணமாக விளையாடி போட்டியை வென்றால் போதும் என்ற எண்ணத்துடன் செயல்படுவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த போட்டி முற்றிலும் மாறிவிட்டது. ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், இப்போது விராட் கோலி போன்றவர்களை நிறைய இளம் வீரர்கள் பின்பற்றினார்கள். அவர்கள் அவர்களைப் பார்த்து அவர்களுடைய முந்தைய சாதனைகளை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடினார்கள். ஆனால் தற்போதைய இந்திய அணியில் உள்ள முக்கியமான 3 – 4 வீரர்கள் அந்த வழியை பின்பற்றுவதில்லை. அவர்களிடம் மரியாதை உள்ளது. ஆனால் அவர்கள் எம்எஸ் தோனியை பின்பற்றுகிறார்கள். ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், இப்போது தீபக் ஹூடா போன்ற வீரர்கள் அவரைப்போல் (தோனி) விளையாடுகிறார்கள்”

latif

“சுனில் கவாஸ்கரில் தொடங்கி சச்சின் டெண்டுல்கரை பின்பற்றி தற்போது நிறைய வீரர்கள் எம்எஸ் தோனியை பின்பற்றுகிறார்கள். அவர் விளையாடிய விதத்தையும் போட்டியை எடுத்துச் சென்ற விதத்தையும் இப்போதைய வீரர்கள் பின்பற்றுகின்றனர். தற்போது அணியில் முதல் 3 வீரர்கள் சுமாராக இருந்தாலும் அடுத்த 3 வீரர்கள் அனலாக செயல்படும் திறன் பெற்றுள்ளனர். சூர்யகுமார் யாதவ் 3வது இடத்தில் வாய்ப்பு பெறுவதில்லை.

இதையும் படிங்க : இவர் ஒருத்தர் போதும். டி20 உலகக்கோப்பையை ஜெயிச்சி குடுக்க. அவ்ளோ பவரான பிளேயர் – பாண்டிங் புகழாரம்

இருப்பினும் அவர் அனைத்து இடங்களிலும் பேட்டிங் செய்யும் திறமை பெற்றுள்ளார்” என்று கூறினார். அதாவது தோனியை போல் போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று வெற்றி பெறும் யுத்தியை இப்போதைய இந்திய இளம் வீரர்கள் பின்பற்றுவதாக தெரிவிக்கும் ரசித் லதீப் அதன் காரணமாக சச்சினை போல் விளையாடி சாதனைகளை தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து விட்டதாக கூறுகிறார்.

Advertisement